உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க வேண்டும்.

0
552

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது   வட்டாரங்களில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு பட்டியல்  (போனஸ்) உறுப்பினர்களை கட்சிகள் தெரிவு செய்வதை விடவும்   உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க  ஆவண செய்ய வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கம் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயும்
கிராமங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கும் நோக்கிலேயே இந்த வட்டாரத்தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வட்டாரங்களில்   போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர்கள் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் ஒவ்வொரு கட்சிகளிலும்  போனஸ் பட்டியல் விபரங்களையும் அக்கட்சியின் பிரதானிகள் குறிப்பிட்டிருந்தனர்.

ஒரு வட்டாரத்திற்குள் இரண்டு கட்சிகளின் உறுப்பினர்கள்  இருக்கின்ற வேளை மக்களுக்கு சிறந்த சேவைகள் இடம் பெறாத நிலைமை காணப்படுவதாகவும்  கட்சிகளுக்குள்ளே முறண்பாடுகளும் உறுப்பினர்களுக்குள்ளே போட்டிகள் மாத்திரமே இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே பிரதான கட்சிகளின் அமைப்பாளர்கள் போனஸ் பட்டியல் தெரிவின் போது   வட்டாரங்களில்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாத கிராமங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்து மக்களுக்கு சிறந்த அபிவிருத்தி திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.