கலப்புமுறைத் தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் ஒரு சவாலா?

0
642
 
வரலாற்றில் முதற்றடவையாக இலங்கையில் நடைபெற்றுமுடிந்த கலப்புமுறையிலான உள்ளுராட்சிமுறைத்தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத் தெரிவு என்பது ஒரு சவாலாக மாறியுள்ளதைக்காணலாம்.
 
60பெண் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
தேர்தல் ஆணைக்குழு தானேவகுத்த தேர்தல் கணிப்புப்பொறிமுறைகளுள் இதற்குத்தீர்வுகாணமுடியாமல்திண்டாடுகின்ற நிலை தென்படுகின்றது.
 
பெண்களுக்கான 25வீத இடஒதுக்கீட்டை பரிபூரணமாக நிறைவேற்றவேண்டும். இது சட்டம். அப்படி நிறைவேற்றப்புறப்படுகின்ற பட்சத்தில் பெண் பிரதிநிதித்துவத் தெரிவில் தேர்தல் ஆணைக்குழு சவாலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அப்படி என்ன  பெரிதாக சவால் என்று நீங்கள் கேட்கலாம். 
 
 
உள்ளுராட்சிமன்றக்கட்டளைச்சட்டம் கலப்புமுறைத் தேர்தல் சட்டப்படி  20வீதத்திற்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகப் பெறும் கட்சிகளிடம் பெண் பிரதிநிதித்துவத்தை  கோரமுடியாது. அதாவது  20வீதத்திற்கு கூடுதலான  வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சிகளிடம் அல்லது சுயேச்சையிடம் தான் பெண் ஆசனங்களைக்  கோரமுடியும்.இதுசட்டம்.
 
கணிப்புமுறையைப் பார்த்தால் :
 
தேர்தலில் 20வீதத்திற்குக்  குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும்..
வரும் தொகையை ஏலவே குறித்த சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட பெண் பிரதிநிதித்துவத்தால் பிரிக்கவேண்டும். வரும் தொகையை கட்சிகள் பெற்ற வாக்குகளால் பிரித்தால் எத்தனை பெண் பிரதிநிதித்துவம் என்று தெரியவரும். அதனை அந்தந்த கட்சிகள் வழங்கவேண்டும். ஒருவேளை பெண்பிரதிநதித்துவம் வட்டாரத்தில் தெரிவாகியிருந்தால் குறித்தகட்சி பெண்பிரதிநிதித்துவத்தை வழ்ங்கவேண்டியதேவை இல்லை. மாறாக தெரிவாகியிருக்காவிட்டால் விகிதாசாரமுறையில் வழங்கவேண்டும். 
 
சிக்கல் நிலை!
 
வட்டாரத்தில் தேவைப்பட்ட பெண் பிரதிநிதித்துவம் தெரிவாகாமல் ஆண்பிரதிநிதி  மாத்திரமே  தெரிவாகியிருந்தால்  குறித்தகட்சி விகிதாசாரத்தில் பெண் ஆசனங்களை வழங்கவேண்டும். அங்கு தேவையான போனஸ் ஆசனமில்லாவிட்டால் என்ன செய்வது?  
 
அல்லது குறித்த சபையில் ஒரு கட்சியைத்தவிர ஏனைய கட்சிகள் அல்லது சுயேச்சைகள் 20வீதத்திற்குக்  குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும்  பெற்றிருந்தால் அங்கு தேவையான பெண்பிரநிதித்துவ ஆசனங்களை யாரிடமிருந்து பெறுவது? 
 
இந்தச்சிக்கல்கள் பல சபைகளுக்கு உள்ளன. 
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் சட்டத்தை திருத்த முடியாது  நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும் நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
ஆயினும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் பொருட்டு திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும்இ உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை  உறுப்பினர்களின் பதவிக் காலம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் வரைவில்இ அவர்கள் தங்கள் பதவிகளை ஆரம்பிக்க முடியாது என்றும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
 
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறியதன்படி நடைமுறையில் பெண்பிரதிநிதித்துவம் தெரிவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே சட்டமாஅதிபரின் பரிந்துரையுடன் இதற்கு தீர்வுகாணமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழவின் ஆணையாளர்நாயகம் ஆர்.டிம்.டில்.ரதனாயக்க அடுத்தவாரமளவில் இதற்ககான தீர்வு காணப்படுமென்று அறிவித்துள்ளார்.
 
கொள்கை வகுப்பாளர்கள் விதிமுறைளை ஆக்குவோர் சட்டங்களை ஆக்குவோர் இத்தகைய சிக்கல்கள் பிரயோகரீதியில் வருமென்று அலசிஆராய்ந்த பின்னரே அத்தகைய சட்டங்களை விதிமுறைகளை அமுலுக்குகொண்டுவரவேண்டும்.
அதைவிடுத்து நடைமுறை ரீதியில் பிரச்சினைவந்த பிற்பாடு அப்படியும் செய்யலாம் இப்படியும் செய்யலாம் என்று கூறவிளைவது உயரதிகாரிகளுக்குப் பொருத்தமானதல்ல.
 
சரி. இனி விடயத்திற்கு வருவோம். எவ்வாறு பெண் பிரதிநிதித்துவத் தெரிவு சவாலாக மாறியுள்ளது எனபதை இங்கு 2 உதாரணங்கள் மூலமாகப் பார்ப்போம்.1. சம்மாந்துறை பிரதேசசபை 2. காரைதீவு பிரதேசசபை
 
சம்மாந்துறை பிரதேசசபை!
 
சம்மாந்துறைப்பிரதேசசபையில் 20ஆசனங்கள்.  அவற்றில் 25வீதமெனின் 5ஆசனங்கள் பெண்களாக இருக்கவேண்டும். இது சட்டம். தேர்தல் இடம்பெற்றுமுடிந்து பெறுபேறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டார விகிதாசார தெரிவு இடம்பெற்றுள்ளதென்பதைப் பார்ப்போம்.
 
சம்மாந்துறை பிரதேசசபைத் தேர்தல் முடிவுகளின்படி ஜ.தே.கட்சிக்கு 8ஆசனங்கள் அ.இ.ம.காங்கிரசுக்கு 8ஆசனங்கள் ஸ்ரீல.சு.கட்சிக்கு 4ஆசனங்கள் கிடைத்துள்ளன. 
 
 சம்மாந்துறை பிரதேச சபையில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 34262
 
20வீதத்திற்கும்  குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும்..
 
அதாவது  இங்கு ஜே.வி.பி.  த.ஜ.வி.மு  மற்றும் ஸ்ரீல.பொ.பெரமுன  பெற்ற வாக்குகள் நீக்கப்பட வேண்டும். )
 
அதனை 1397 வாக்குகள் கழிக்கப்பட்டது. எனவே (13022 +  1 2911 + 6932) = 32865    
 
 
இதனை 25% ஆன பெண்கள் ஆசனம் 5 ஆல் வகுக்கும்போது 6573
 
இதனை கட்சிகளுக்கு பிரயோகித்தால்
 
ஜ.தே.கட்சி  பெற்ற வாக்குகளின் படி 13022/6573 = 1 மீதி 6449
 
அ.இ.ம.காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் படி 12911/6573 = 1 மீதி 6338
 
ஸ்ரீல.சு.கட்சி பெற்ற வாக்குகள் படி 6932/6573 = 1 மீதி 359
 
ஆகவே . முதல் கட்ட பிரிப்பில் ஜ.தே.கட்சி   1, அ.இ.ம.காங்கிரஸ்  1 , ஸ்ரீல.சு.கட்சி  1
 
ஏனைய 2 ஆசனங்களும் மிகுதியை வைத்து தீர்மானிக்க படும். 
 
அதன்படி ஜ.தே.கட்சி கொண்ட மிகுதி 6449 க்கு ஒன்றும் அ.இ.ம.கா மிகுதி 6338 க்கு ஒன்றும் பெண் உறுப்பினர் வழங்கப்பட வேண்டும். ஆனால் அ.இ.ம.காங்கிரசிற்கு இருக்கும் போனஸ் ஆசனமே 1 ஆகையால் அக்கட்சிக்கு  அதனை  வழங்க முடியாது. எனவே அடுத்த நிலையில் உள்ள மீதி 359 ஐ கொண்டுள்ள ஸ்ரீல.சு.கட்சிக்கு  வழங்க வேண்டும்.
 
எனவே எனவே ஜ.தே.கட்சி   2., அ.இ.ம.காங்கிரஸ்  1 ,  ஸ்ரீல.சு.கட்சி  2
 
 
இதில் வட்டார முறையில் கட்சி பெண் ஆசனம் பெற்று இருந்தால் அது கழிக்கப்படும். உதாரணமாக சு.கட்சி வட்டார முறையில் மல்வத்தையில்  பெண் ஆசனம் பெற்றகாரணத்தினால்  போனஸ்  இல் ஒரு பெண் நியமித்தால் போதும்.
 
ஆனால்  இறுதியாக ஜ.தே.கட்சி   2 அ.இ.ம.காங்கிரஸ்  1  ஸ்ரீல.சு.கட்சி  1 போனஸ்  என்ற முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 5 வரும்.
 
இம்முறை மூலமே 25% ஆன பெண் ஆசனங்கள் அதாவது 5 பெண் ஆசனங்கள் தீர்மானிக்க படும். 
 
இதேவேளை சு.கட்சி பெண் ஆசனம் தொடர்பில்  சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் சில வேளை அது 2 உம் ஆண்களுக்கே வழங்கப்படும் சாத்தியமும் உண்டு. காரணம் அக்கட்சி பெற்ற ஆசனங்களில் 4 இல் 1 வட்டார முறைப்படியே பெண் உறுப்பினரை கொண்டு உள்ளது. அதாவது 25@. இதனால் போனஸ்  மூலம் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களும் ஆண்களாக அமைய வாய்ப்பு உண்டு. இது பற்றிய இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கே உண்டு என தெளிவாக உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்த சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண் அங்கத்தவர்கள் வருவதற்கே  வாய்ப்பு உண்டு.
 
இறுதியாக ஜ.தே.கட்சி   1 அ.இ.ம.காங்கிரஸ்  1  ஸ்ரீல.சு.கட்சி  0 என்ற போனஸ்  முறையில் பெண்கள் நியமிக்க வேண்டும். மொத்தமாக (வட்டார முறையில் தெரிவான பெண்ணோடு சேர்த்து) 4 வரும்
 
சிலவேளை இப்படி நடந்திருந்தால் அதாவது அ.இ.ம.காங்கிரஸ்  8 ஆசனங்களையும் வட்டார முறையில் பெற்று அது அனைவரும் ஆணாக இருந்து போனஸ் இல்லாது போனால் 5 வது பெண் ஆசனத்தை வழங்குவது யார்? வெற்றி பெற்ற கட்சியா? தேர்தல் ஆணையாளரே இடிந்துபோவார்.
 
சட்ட சிக்கல்கள்:-
 
விகிதாசாரப்படி அ.இ.ம.காங்கிரசிற்கு 2 ஆசனங்கள் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால்  வட்டார முறையிலேயே 7 ஆண்கள் தெரிவாகி இருப்பதால் அதில் ஒருவரை சட்டப்படி மாற்ற முடியாது. (1 போனஸ் மட்டுமே பெண் வழங்க வேண்டும்)
 
சு.கட்சி க்கு விகிதாசாரப்படி 2 பெண்கள் என்று வருகிறது. வட்டாரத்தில் ஒன்று இருப்பதால் போனஸ் 1 ஆக குறையும். போனஸ் 1 உம் கொடுக்க தேவை இல்லை. காரணம் வட்டார ஒரு ஆசனத்தோடு மொத்த 4 இல் 1 அதாவது 25% பெண்கள் வருகிறது. சட்டப்படி போனஸ் 2 ஐயும் ஆண்களுக்கே கொடுக்கலாம்.
 
ஜ.தே.கட்சியைப்  பொறுத்தவரை விகிதாசாரப்படி 2. அதாவது 8 இல் 2. ஆகவே  25% பூர்த்தி. ஆகவே UNP க்கு 2 க்கு மேல் கொடுக்க வேண்டி சட்டத்திலும் முடியாது. விகிதாசாரத்திலும் முடியாது. (விகிதாசாரப்படி கொடுக்க வேண்டி வந்தால் அது சு.கவே  யே கொடுக்கணும். மேலுள்ள கணிப்பை பார்க்க.)
 
கடைசியில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு 4 பெண்கள் ஆசனமே (20%) வருகிறது. இது தேர்தல் அடிப்படை சட்டத்தையே மீறுகிறது.
 
காரைதீவு பிரதேசசபை…
காரைதீவு பிரதேசசபையில் பெற்ற செல்லுபடியான வாக்குகள் – 10715
10715 / 11 = 974 ( ஒருவருக்கு)
இதனடிப்படையில் கட்சிகளுக்கான உறுப்பினர்களை பங்கிட்டால் (விகிதாசார முறை)
அ.இ.ம.கா -1010/974 = 1.03 =1
த.அ.கட்சி -3202 /974 = 3.28 =3
ஸ்ரீல.சு.கட்சி – 1684 / 974 = 1.72=2
சுயேச்சை-01  – 1985 /974 = 2.03=2
ஸ்ரீல.முகா – 1522 /974 = 1.56=2
சுயேச்சை -2  – 829 / 974 = 0.85=1
 
இவ்வாறே 11 அங்கத்தவர்களும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் த.அ.கட்சி வட்டாரங்கள் நான்கை வென்றதனால் அவர்களிடம் இருந்து ஒரு உறுப்பினரை கழிக்க முடியாது ஆனால் ஏனைய கட்சிக்கு வழங்கவேண்டியதையும் குறைக்க முடியாது இதனால் ஒரு உறுப்பினர் அதிகரித்துள்ளது. அது தொங்குஉறுப்பினரென்பதை அறிவோம். அதன்படி காரைதீவு பிரதேசசபைக்கு 12ஆசனஙக்ள கிடைத்துள்ளன.
சரி இனி பெண் பிரதிநிதித்துவம் பற்றிப்பார்ப்போம்.  இங்கு சட்ப்படி  2 பெண்கள் இருக்கவேண்டும். ஏலவே  த.அ.கட்சி வட்டாரமுறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெற்றுள்ளது.
எனவே போனஸ் முறையில் ஒரு பெண் உறுப்பினரைப்பெறவேண்டும்.
 
ஏலவே கூறிய கணிப்பின்பிரகாரம் இங்கு பார்ப்போம்.
20வீதத்திற்கு கூடுதலான  வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு மேல் பெறும் கட்சிகளிடம் அல்லது சுயேச்சையிடம் தான் பெண் ஆசனங்களைக்  கோரமுடியும்.
 
இங்கு இந்தச்சட்டத்தின்படி  ஆக த.அ.கட்சி மட்டுமே 3ஆசனங்களுக்கு மேல் பெற்றுள்ளது. 20வீதத்திற்கும் கூடுதலான 3202(29.8)வாக்குகளைப்பெற்றுள்ளது.
 
ஏனைய 7 அணிகளும் 20வீதத்திற்கு குறைவான வாக்குகளையும் 3ஆசனங்களுக்கும் குறைவான ஆசனங்களையுமே பெற்றுள்ளது. அதன்படி யாரிடமிருந்து இந்த ஒரு பெண் ஆசனத்தைப் பெறுவது? இது சிக்கல்.
 
சரி  20% க்கு குறைவான வாக்குகளோடு சேர்த்து 3 ஆசனங்களுக்கு குறைவாகவும் பெறும் கட்சிகளின் அல்லது சுயேச்சைகளின் வாக்குகளை மொத்த செல்லுபடியான வாக்குகளிலிருந்து கழிக்கவேண்டும் என்று பார்த்தால் 
 
 
செல்லுபடியான வாக்குகள் 10715  -.(1985 1964 1522  1010  829  280 203 )   —   7793 வரும் =2922
 
இந்த 2992ஜ  பெண்ஆசனங்களின் எண்ணிக்கையான 2 ஆல் வகுத்தால் 1461 வரும்.
இந்தத்தொகையைவைத்து பெண் ஆசனம் பெறமுயற்சித்தால் 4 கட்சிகள்  இந்தத்தொகையைப் பெற்றிருந்தாலும்; இந்தப் பெண் ஆசனத்தை யாரிடமிருந்து பெறுவது? எப்படி 25வீதமாக்குவது?
 
இதுவே இன்றுள்ள பிரச்சினையும் சிக்கலும். இப்படி இலங்கையில் 60 பெண் உறுப்பினர்களின் தெரிவு சிக்கலில் உள்ளது.இதனைத்தீக்கும்பட்சத்திலேயே புதிய உறுப்பினர்கள் 240சபைகளில் பதவியேற்கமுடியும். பொறுத்திருந்துபார்ப்போம்.