கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

0
387

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கும்புறுமூலை அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கும்புறுமூலை கிராமத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் அடிப்படை தேவைகள் சார்பாக கலந்துரையாடியதுடன் 50 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கி வைத்ததார். இன் நிகழ்வில் மாவட்ட இந்து இளைஞர் பேரவை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.