இந்திய உதவியுடன் 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி

0
672
மலையத்தில் காணப்படும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்துடன் ஓப்பந்தம் ஒன்று அன்மையில் கைசாத்து இடப்பட்டது இதன் படி விலைமனு கோரல் உட்பட அடுத்த கட்ட நடவடிக்கைகள் 18.02.2018 முதல் ஆரம்பிக்கபட்டு குறித்த காலத்தில் இந்த  அனைத்து அபிவித்திகளும் குறுகிய காலத்தில் முடிக்கபப்டும் என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

மேற்படி விடயம் தொடர்பாக கல்வி அமைச்சில் கல்வி  இராஜாங்க அமைச்சருக்கும்   கொழுப்பு இந்திய உயர் ஸ்தானிகரின் செயலாளருக்குமான கலந்துறையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துறையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
இந்த கலந்துறையாடலில் கவ்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திஸ்ஸ ஹேவவித்தானகே கல்வி அமைச்சின் பாடசாலைகளின் கட்டட அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர  தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி பனிப்பாளர் எஸ்.முரளிதரன் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பனிப்பாளர் திருமதி சபாரஞ்சன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உட்பட பாடசாலையின் அதிபர்   ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருந்து தெரிவித்த   கல்வி இராஜாங்க அமைச்சர் அவர்கள்.
இந்த பாடசாலைக்கு இந்திய உதவியின் மூலம் 95 மில்லியன் (950 இலட்சம்) ரூபா நிதி கிடைப்பதற்கான முடிவு இந்திய அரசினால் எட்டபட்டது ஒரு நல்ல விடயமாகும் இதற்கு இந்திய அரங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். மேலும் மலையகத்தில 300 மில்லியன் ரூபா செலவில் 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபடவுள்ளன. இதற்கான வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கபட்டு வருகின்றது.
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு இந்திய உதவி வந்த போது  அதற்கான வற் வரியினை மத்திய மாகாணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.மாகாண சபையோ கட்ட முடியாது என்று மத்திய மாகாண சபை கையை விரித்து விட்டது. இதனால் இந்த பணம் மீண்டும் இந்திய அரசிற்கு செல்லும் நிலை ஏற்பட்ட பின் எனது அமைச்சின் செயலாளர்களையும் அதிகாரிகளையம் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி கல்வி அமைச்சின் மூலம் வற் வரியை செலுத்த முடிவு எட்டபட்டது. அதன் பயனாக திரைசேரியின் அனுமதியும் பாராளுமன்ற அமைச்சரவையின் அங்கிகாரமும் பெறபட்டு ஒப்பந்தம் கைசாத்து இடபட்டது. இந்த பணத்தின் மூலம் அபிவிருத்திகள் அனைத்தும் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையில்  மேற்க் கொள்ளபடும் என்று கூறினார்.
இந்த பாடசாலை தொடபில் மேலும் தெரியவருவதாவது 1932ம் ஆண்டு மலையகத்தின்  முத்த தலைவர்களில் ஒருவாரான அமரர் கே.ராஜலிங்கம் அவர்களின் முயற்ச்சியில்  அமர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை பல புத்திஜீவிகளை உருவாக்க காரணமாக இருந்துள்ளது.
இந்த பாடசாலை இலங்கை இந்திய வரலாற்றில் முக்கியத்தவம் பெற்ற ஒரு பாடசாலையாகும் முன்னால் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்களின் தாத்தா இலங்கைக்கான இந்திய துர்துவராக முன்னர் இலங்கையில் இருந்துள்ளார். இந்த காலப்பகுதியில் இவரை பாடசாலைக்கு அமர் பாராளுமன்ற உருப்பினர் கே.ராஜலிங்கம் அவர்களினால் நிகழ்வு ஒன்றுக்கு அழைக்கபட்டார். அப்போது அவர் தனது மனைவியுடன் வருகை தந்திருந்தார். அன்றய தினம் அவரது மனைவியின் பிறந்த தினம். இதை அறிந்த அமர் பாராளுமன்ற உருப்பினர் கே.ராஜலிங்கம் இவருக்கு பரிசாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என்பதற்காக அவரின் பெயரான “சரஸ்வதி” என்ற பெயரை இந்த பாடசாலைக்கு சூட்டினார். இதற்கு முன்னர் இந்த பாடசாலையின் பெயர் “பசுபதி” வித்தியாலயம் என காணப்பட்டது. இந்த வரலாற்று முக்கித்துவதை கண்டியில்  இருந்த இந்திய உதவி உயர் ஸ்தானிகராக இருந்த ஏ.நடராஜன் அவர்களிடம் தற்போதய அதிபர் அடங்களாக பாடசாலையின் பழைய மாணவர்களும். பெற்றோர் அபிவிருந்தி சங்க உறுப்பினர்களும் கண்டி தமிழ் வர்த்தகர்களும் கூறியதன் பயனாக இந்த விடயம் முன்னால் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் அவர்களுக்கு அறிவிக்கபட்டது. இதன் பின்னர் இவரின் உத்தவிற்கு அமைய முன்னால் இலங்கைக்கான இந்திய துர்துவர் வை.கே.சிங்ஹா இந்த பாடசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டு பார்வையிட்டு அபிவிருத்திகள் தீர்மாணிக்கபட்டு மேற்படி உதவு தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளபட்டது. இதுவே இந்த பாடசாலையின் அபிவிருத்திக்கு முக்கிய காரணமாகும்.