உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

0
396

உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்ற உலக சைவத் திருச்சபை உலகம் முழுவதும் தனது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.குறிப்பாக இலங்கையில் வடகிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் கடந்த மாதம் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தியது.முக்கியமாக பாடசாலை மாணவர்களுக்கு கதாபிரசங்கம் மற்றும் சிவ வழிபாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக உலக சைவ திருச்சபையின் தலைவர் அடியார் விபுலாநந்தா மாணவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் கதாபிரசங்க நிகழ்வுகளையும் நடாத்தினார்.

இதன்போது இலங்கை கிளையின் கூட்டம் ஒன்று உலக சைவ திருச்சபையின் தலைவர் அடியார் விபுலாநந்தா தலைமையில் நுவரெலியாவில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் பொழுதே உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவு செய்யப்பட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கடந்த பல வருடங்களாக சைவத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் தன்னை அர்ப்பணித்து இறைபனி செய்துவருவதும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தினதும் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலத்தினதும் தலைவராக இருந்து பல கும்பாபிN~கங்களையும் அறநெறி கல்வி வளர்ச்சிக்கும் சேவை செய்து வருகின்றார்.இதனை கருத்தில் கொண்டே உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தெரிவு தொடர்பாக உலக சைவ திருச்சபையின் தலைவர் அடியார் விபுலாநந்தா இராஜாங்க அமைச்சரை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தியதுடன் அவருடைய சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்.

எதிர்வரும் மே மாதம் கனடா நாட்டின் ஸ்காப்ரோ நகரில் நடைபெறவுள்ள உலக சைவத் தமிழ் பண்பாட்டு மாநாட்டிற்கும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமை தாங்கவுள்ளார்.இந்த மாநாட்டில் இலங்கை, இந்தியா,மலேசியா,சிங்கப்பூர்,அவுஸ்திரேலியா,உட்பட பல நாடுகளில் இருந்தும் மதத் தலைவர்களும் கல்விமான்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.இந்த மாநாட்டின் பொழுது கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.