தமிழ் மக்களுக்கெதிராக வரும் எதிர்ப்பு அலைகளை வெல்ல தமிழ் மக்களும் திரட்சி கொண்டாக வேண்டும்.

0
825

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாட்டின் பல்வேறு தளங்களிலும் குழப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.இதனடிப்படையில் நடைமுறையில் உள்ள தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றம் பலர் மத்தியில் பெரும் ஏமாற்றமாகவே இருந்துகொண்டிருக்கின்றது.
குறிப்பாக மகிந்தவின் பொது ஜனமுன்னணியில் புதிய புயல்வேக வரவு தேசிய அரசியலில் பெரும் ஏமாற்றங்களையும் மாற்றங்களையும் தோற்றுவித்துள்ளன.
தேசிய அரசியலில் நோக்குகையில் மகிந்த கூட இந்த மாற்றத்தை எதிர்பார்த்திருக்க முடியாது என்றே பலரும் கூறுகின்றனர். அவர்மூலமாக ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றம் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா தலமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சையை மிகப்பெருமளவில் உலுப்பிவிட்டிருக்கின்றது.
இதன்காரணமாக அவர் பல்வேறு தீர்மானங்களையும் கலந்துரையாடல்களையும் எடுக்கும் நிலைக்குத்தள்ளிவிட்டுள்ளது.ஜனாதிபதிக்கு இந்தமாற்றம் அவர் எதிர்பாரத்ததைவிட ஒரு பெரும் ஏமாற்றமாகவே இருக்கிறது..இது அவருக்கு ஒரு கண்டத்துச்சனியா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மறுதலையாக மற்றுமொரு தேசியக்கட்சியான ஐதேக வின் ரணில் விக்கிரம அவர்களையும் இந்தமாற்றம் வழமைபோல் மீண்டும் உலுப்பிக்கொண்டிருக்கின்றன. அவரது தலமைப்பதவி தொடர்பான கேள்விகளும் ஐதேக வின் உள்ளக வட்டாரங்களில் மீண்டும் முளைவிட்டுள்ளன. அதனுடைய முடிவகள் சில நாட்களில் மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலமைகள் வரலாம்.
ஆயினும் அவரது கட்சி ஆட்சி யமைக்கும்விடயத்தில் ஒரு பலமான நிலமைக்கு தள்ளப்படலாம் என்ற வகையிலும் நோக்குவதற்கு இடமுண்டு. அதனடிப்படையில் ஐதேகக்குள் நெருக்குதல்கள் வந்தாலும் பிற்காலத்தில் காலம்போக சுகம்வரும் என்ற நிலமையும் ஏற்பட இடமுண்டு.
இக்கட்சிகளுக்கு இவ்வாறான நிலமை ஏற்பட்ட நிலையில் இவர்களது ஆட்சிக்கு கூட்டாக செயற்படும் தமிழ் கூட்டமைபினருக்கும் இந்த மாற்றம் எதிர் பாரத்த ஒன்றல்ல. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோன்ற ஒரு நிலமையும் காணப்படுகின்றன.
ஓட்டுமொத்தமாக தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் எற்படுத்தப்பட்ட எதிர் பார்ப்புகளும் பெரும் ஏமாற்றமான கட்டத்தை எட்டியுள்ளதாகவே கருத இடமுண்டு. நடைமுறையில் உள்ள நல்லாட்சி கூட்டமைப்பிற்கு மகிந்த அவர்கள் தேர்தல் மூலம் கொண்டு வரப்பட்ட குண்டு எவ்வாறான நிலையில் செயலிழக்க வைக்கப்படப்போகிறது என்ற அங்கலாயப்பை மக்கள் மத்தியில் பரவ விட்டிருக்கின்றது.
கூட்டமைபப்பும் தான் பல மாதங்களாக சிரமப்பட்டு கொண்டு வரப்பட்ட அரசியல்யாப்பு மாற்றம்,இடைக்கால அறிக்கை செயற்பாடுகள் தொடர்வதற்கான நிலமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.? மறுபக்கத்தில் வடகிழக்கில் கூட்டமைப்பு கட்சியின் பலம் மீதான வாத விவாதங்கள் ,உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியமைப்பு நடவடிக்கைகளிலும் எதிர்பாராத மாற்றங்களை கொடுத்துள்ளன.
இவை இப்படி இருக்க சர்வதேச பங்காளிகளையும் இந்த மகிந்த வின் தேர்தல் குண்டு அவசரமாக செயற்படும் நிலமையை ஏற்படுத்தியுள்ளன. மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியானது சர்வதேச நோக்கில் சீனாவின் ராஜதந்திரத்திற்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகின்றன. இந்தியா ,அமேரிக்காவின் ஆசியப்பிராந்தியத்தின் செல்வாக்கை ,பலத்தை சிதைக்க வைத்த குண்டாகவும் இது உள்ளன.
இந்நிலையில் உடனடியாக மேற்படி . இந்தியா ,அமேரிக்க போன்ற இருநாட்டு இராஜ தந்திரிகளும் பிளவடையும் நிலமையை எட்டியுள்ள நல்லாட்சிக்கட்டமைப்பை மீழ உருவாக்க எத்தணித்துசெயற்பட்டுள்ளன. கூட்டாட்சி குளுமத்தை பலப்படுத்தும் பேச்சுவாரத்தையை தூதுவர்கள் முடுக்கிவிட்டிருந்தனர்.
ஓட்டுமொத்தமாக புதிய தேர்தல் முறையானது எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மையை அதிகமான உள்ட்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கவில்லை. முஸ்லீம்காங்கிரஸ்,தமிழ்தேசியக்கூட்டமைப்பு அடங்கலான வடகிழக்கில் செயற்படும் சிறுபான்மைக்கட்சிகளுக்கும் இது ஒரு எதிர்பார்க்காத மாற்றமாகவே உள்ளன.
ஆனாலும் இவ்வாறான நிலமையானது வடகிழக்கல் உள்ள கட்சிகளில் ஏற்பட விருந்த ஆணவத்தை சற்று தட்டி அமரத்தியுள்ளதுடன். அதிகார பகிர்வு கேட்ட சிறுபான்மையினர் தமக்குள் கூட்டாட்சி அதிகார பகிர்வு பற்றி நடமுறையில் செயற்பட வைத்துள்ளன.ஆனாலும் தமிழ்,முஸ்லீம்கட்சிகள் தமது கடந்த கால கூட்டின் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இது வடகிழக்கின் ஜனநாயக அரசியல் சூழலில் மக்களுக்கு ஒரு சாதகமான நிலைமையாகவே கொள்ள முடியும். வடகிழக்கின் ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அரசியல் நகர்விற்கு சிறந்த சாதகமான மாற்றத்தை இது வழங்கலாம் என எதிர்பார்க்கலாம்.
முன்னர் போன்று நான்தான் பெரியவன் என்ற மமதையில் சிறுபான்மைக்கட்சிகள் செயற்படாது பிட்டும்தேங்காய்பூவாக தமது பூர்வீக செயற்பாட்டை முன்னெடுக்க மக்கள் ஆணை வழங்கியுங்கியுள்ளனர்.என்றும்கொள்ளலாம்.
கிழக்கில் தமிழ்க்கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம்காங்கிரஸ் மாகாண சபைக் கூட்டாட்சியை உள்ளுராட்சியிலும் தொடர வழிகோலியுள்ளன. அதற்கான உரையாடல்கள் இடம்பெறுவதாகவேஇரு கட்சித்தலமைகள் கருத்துக்கள் இருப்பதாக உறுதியற்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இது வடக்குகிழக்கை பொறுத்தவரை,சிறுபான்மை மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதொரு சகுனமாகவே கொள்ளமுடியும். இதற்கு உரமூட்டு வதாக தென்னிலங்கையில் மகிந்தவின் பொதுஜன முன்னணியின் வெற்றியும் வளர்ச்சியும் எதிர்காலத்தில் அமையலாம்..
இதற்கிடையில் தமிழ் கட்சிகளைப்பொறுத்தவரையிலும்.அண்மைக்காலமாக உட்பூசலால்,சயநலப்போக்கால் பிளவிற்கு முயற்சித்தவர்களின் செயற்பாட்டிற்கு ஆப்புவைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் மக்களைப்பொறுத்தவரை ஆதரவான செய்தியாக கொள்ளமுடியும். அந்தவகையில் தமிழ் கூட்டமைப்பினதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் அறிவிப்புக்கள் அமைந்துள்ளன. போராட்ட வடிவங்கள் மாறாலாம் போராட்ட இலக்கு மாறாது என்ற தலைவரின் கருத்தும் இங்கு ஆராயவேண்டிய வசனமாகவுள்ளன.
இந்த கூட்டின்(;ஈபிடிபி) அறிவிப்புக்கள் தொடர்பான விமர்சனங்கள் அதிகளவில்வராவிட்டாலும் பல இடங்களிலும் தமிழ் மக்களின் கொள்கை தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளன.குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் எவ்வாறு கூட்டமைப்பு கூட்டாட்சி நடாத்தமுடியும். அவர்கள் தேசியத்தின் துரோகிகள் என வாதங்கள் எழுந்துள்ளன.இதனை ஈழமக்கள் ஜநாயக கட்சியின் தலைவர் டக்களஸ்தேவானந்தாவும் கவனத்தில் கொள்வதுடன் பகிரங்கமாக தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான தமது உறுதி மொழியை மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது
தற்காலத்தில் தமிழ் மக்களைப்பொறுத்தவரையில் வடகிழக்கில் அதிகமான ஆதரவை பெற்றவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இரா சம்பந்தன் தலமையிலான தமிழ் கூட்டமைப்பினர்தான் என்பதனை தேர்தல் முடிவுகள் மீள உறுதிப்படுத்தியுள்ளன. சர்வதேச ரீதியாகவும் தேசியரிதியாகவும் இதன்மூலம் அவர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.அவர்களது கரங்கள் பலபடுத்தப்பட வேண்டும்.அதற்கு அவர்களும் தங்களது செயற்பாடுகள் தொடர்பாக கவனத்தைக்கொண்டாக வேண்டும்.
ஆனாலும் பல்வேறு விதமான எச்சரிக்கைளுக்கு மத்தியில் தான் அந்த உறுதிப்பாடு மக்களால் மீளகூட்டமைப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளன. அதனை தேசியக்கட்சிகளான ஐதேக,ஸ்ரீலங்காசுதந்திரகட்சி பிரதிநிதிகள் அங்காங்கே பெற்ற வெற்றிகளும் சுயேட்சைக்குளுக்கள்,உதிரிக்கட்சிகளின் பிரதிநிதிகளை ஆங்காங்கே மக்கள் தெரிவு செய்ததன் மூலமும் குறிப்பாக வடமாகாணத்தில் ஏற்படுத்திய முடிவுகளின் மாற்றங்கள் மூலமாகவும் இடித்துரைத்துள்ளனர்.
இதனை தமிழ்கட்சிகள் அரசியலுக்காக பேசாமல் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள செயற்பாட்டிற்கான பாடமாக கொள்ள வேண்டியுள்ளமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுவான பார்வையில் முக்கியமாக சுரேஸ்பிரேமச்சந்திரன்,குமார்பொன்னம்பலம் போன்ற தலைவர்களும் ஆழமாக ஆராய வேண்டும். ஏனெனில் அவர்கள் விமர்சிப்பது போன்று வடகிழக்கில் வெளியான முடிவுகளில் கூட்டமைப்பிடம் இருந்து சென்ற அனைத்து வாக்குகளும் அவர்களை அடைய வில்லை.
மாறாக ஐதேகா,,ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி,ஈபிடிபி,சுயேட்சைக்குளுக்களென பலரது கைக்கு சென்றுள்ளன. இதனடிப்படையில் உங்களது நடவடிக்கையையும் மக்கள் முற்றாக ஏற்கவில்லை. அதிலும் வடமாகாணத்தில் ஏற்காதமை மிகுந்த கவலையான விடயம். தேசியக்கட்சிகளின் வரவு இதற்கு சிறந்த சாட்சிகள்.
ஆகவே எவை எப்படி இருந்தாலும் இந்த தேர்தல் முடீவுகள் தமிழ் மக்களை ஒரு அபாயகரமான சூழலுக்குள் விட்டுள்ளன. அதுதான் மகிந்தவின் மீழ் பலமடைதலாகும். சுருங்கக்கூறின் தென்பகுதி மக்களின் பழையகுருடி கதவைத்திறடி என்ற நிலப்பாடாகும்.
இதனைத்தான் தமிழ் தலமைகள் ஏலவே சர்வதேசத்திற்கும் உள்ளக அரசியல் சக்திகளுக்கும் பலமுறை சொல்லிவிட்டன. சர்வதேச துணையுடனான நடவடிக்கைகள் தான் தமிழ் மக்களுக்கு தீர்வைத்தருமென்று வலியுறுத்திவந்துள்ளன.
விடுதலைப்பலிகளைப்பயங்கரவாதி என்று பிரகடம் செய்த அமேரிக்காவும் இந்தியாவும் கூட தற்போது மகிந்த என்ற பேரினவாத பயங்கரவாத சிந்தனையாளர்கள் மூலம் மீழவும் தண்டிக்கப்பட்டு விரைவாக அவர்களை செயற்பட வைத்துள்ளன.. இது தமிழ் மக்களுக்கு புதிய விடயமல்ல எதிர் பாரத்த விடயம் தான்.
தமிழ் மக்களைப்பொறுத்தமட்டில் உள்ளக ரிதியில் சகலதமிழ் கட்சிகளும் தமது நடத்தை குறைபாட்டைக்கொண்டவைகள் தான் அவர்கள் தத்தமது குறைபாடுகளை ,செயற்பாடுகளை ஆழமாக சுயபுத்தியுடன் ஆராய்ந்து அவற்றுக்கான பரிகாரங்களைக்காண வேண்டும்.
மட்டுமன்றி நிபந்தனையின்றி தமிழ்மக்களின் நிரந்தரமான தீர்வு நோக்கி இறுக்கமான பிணைப்பிற்குள் வரவேண்டும். அவ்வாறு இல்லாது வியாக்கியானம் பேசுவதால் தென்பகுதியில் படைகளுடன் காத்து நிற்கும் மகிந்தவை வடகிழக்கிற்கு கரகமாட வழி சமைப்பதாகவே அமையும்.
இன்றைய அரசியல் சூழலில்,; சர்வதேச பார்வையில் தமிழ் மக்களின் நேர்மையான போராட்டம் எதிர் பாராத வகையில் மேலும் அங்கீகரிப்பதற்கான மாற்றம் கூட ஏற்படுத்தப்படலாம்.
அதற்கான தெளிவான பாதை வரையறுக்கப்பட்டு விட்டன. அதனையே தென்பகுதியின் எதிர்பாராத மாற்றங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. தமிழ்கட்சிகள் கூட்டாக களமாடி கங்கணக்கட்டக்கூடிய சந்தர்பம் வந்துள்ளன. அவ்வாறு உறுதியாக நின்றால் கத்தியின்றி யுத்த மின்றி முழு சர்வதேசத்தை அதற்காக நிற்பந்திக்க முடீயும்.
அதனை வரும் 2018 மார்ச்சமாதம் நடைபெறவுள்ளஐநாவின் மனித உரிமைகள்பேரவைக்கூட்டத்தில் ஒலிக்க வைக்க முடியும். . அதற்கு கட்சிகள் அனைவரும் தமிழ் மக்கள் மீதான பற்றுள்ளவர்களாக விருந்தால் முடியும்.தமக்குள் ஏற்பட்டுள்ள சுயநல மான சிந்தனையை கைவிட்டால் முடியும் இதற்கு ஈபிடிபி அல்ல எந்த கட்சியானாலும் கூட்டுச்சேர பொருத்தமானவர்கள்தான்.
அதனை விடுதலைப்புலிகள் கடந்த காலத்தில் பல தமது அரசியல் செயற்பாட்டின் மூலமாக உறுத்திப்படுத்தியுள்ளனர்.அதில் ஒன்றுதான் தமிழ் கூட்டமைப்பாகும். ஆகவே ஏற்ப்பட்டுள்ள மாற்றம் ஒருவகையில் தமிழ் மக்களுக்கு சாதகமானதாகவே கொள்ள முடியும். அதனைப்பயன்படுத்தும் இராஜ தந்திரம்தான் முக்கியமாகும்.
“2002 ல் நடந்த சமாதன ஒப்பந்தத்தின் பின்னர் வன்னியில் விடுதலைப்புலிகளை கிழக்கின் ஊடகக்குழு ஒன்று சென்று சந்தித்தது. அதன்போது அரசியல் செயலகத்தில் விடுதலைப்பலிகளின் அரசியல்பேச்சாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ் செல்வனிடம் ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்புகின்றார். நீங்கள் சமாதன உடன்பாட்டில் வந்துள்ளீர்கள். நீங்கள் ஆட்சி அமைக்கும் காலம் வந்தால் ஈபிடிபியின் நிலமை என்ன எனக்கேளவி எழுப்பினார். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். நாங்கள் தமிழ் மக்களின்தீர்வு தொடர்பான தெளிவான கொள்கையை வைத்துள்ளோம்.
ஏமக்கப்பால் எமது மக்கள் தொடர்பான பிரச்சனைக்கு ஒரு இலக்கை வைத்துள்ளவர்கள் ஈபிடிபியினர். அதாவது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் அதுவாகும். ஆகவே அவர்கள் நாம் ஆட்சி அமைக்கும் காலத்தில் வடகிழக்கில் எதிர் கட்சியாக செயற்படும் வாய்ப்புள்ளது. அவர்களையும் கூட நாம் எதிர்பதற்கு காரணம் அவர்கள் எமது மக்களின் எதிரிகளின் கைகளில் உள்ளமைதான்.
அவ்வாறு இல்லாமல் வெளியேறி நடுநிலையாக தமது இலக்கில் நின்று செயற்பட்டால் நாம் ஏன்; அவர்களை எதிர்க்கப்போகின்றோம். எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆகவே எமது மக்களின் பிரச்சனைக்கான தீர்வுதான் எமது கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும். அதற்காக யாருடனும் கூட்டுவைக்கலாம் இந்தக்காலத்தில்.ஏனென்றால் யாரும் இன்று சுத்தமானவர்கள் அல்ல ?என்பதே மக்களின் நிலப்பாடு அதுவே தேர்தல் முடிவாகவுள்ளன.தமிழ் மக்களுக்கெதிராக வரும் எதிர்ப்பு அலைகளை வெல்ல தமிழ் மக்களும் திரட்சி கொண்டாக வேண்டும்.தமிழ் மக்களின்போராட்டம்; தற்காலத்தில் அரசியல் ரீதியானது என்பதனையும் சகலரும் கருத்தில் கொள்வது அவசியமாகின்றது.
..பொன்.சற்சிவானந்தம்….