மட்டக்களப்பில் பாதாளத்தில் வீழ்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு! துள்ளிப்பாய்ந்த இதர கட்சிகள்

0
961

(படுவான் பாலகன்) உள்ளுராட்சி தேர்தல் கடந்த மாசி 10ம் திகதி நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளான 28வீதமளவிலான வாக்குகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த மாகாணசபை, நாடாளுமன்றத் தேர்தல்களை விட சடுதியான குறைவு வாக்ககாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் சான்றாதாரம் காட்டுகின்றன.
தமிழ்தேசிய கூட்டமைப்பு, 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 50.83வீதமான வாக்கினையும், 2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 53.25வீதமான வாக்குகளையும் பெற்றிருந்து. ஆனால் உள்ளுராட்சி தேர்தலில் 20வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் குறைவடைந்துள்ளது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 1.18வீதமான வாக்கினையும் 2015ம் ஆண்டு 13.55வீத்தினை பெற்றிருந்த அதேவேளை நிறைவுற்றிருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் 15வீதமளவிலான வாக்கினைப் பெற்று வளர்ச்சியடைந்திருக்கின்றது. அதேபோல 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெறுமனே 959 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி தற்போது நடைபெற்று முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி தேர்தலில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, குறிப்பாக 7வீதமான வாக்கு வீதத்தினை பெற்று விரைவாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணசபை, பாராளுமன்றம் போன்ற தேர்தல்களில் களமிறங்கியிருந்தது. ஆனாலும் இம்முறை உள்ளுராட்சியில் தனியாக களமிறங்கி 15வீதமான வாக்கினை பெற்றிருக்கின்றனர்.
அவ்வகையில் பார்கின்ற போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைவடைந்துள்ளதுடன், இதர கட்சிகளின் வாக்குவங்கிகள் அதிகரித்திருக்கின்றன.