மைத்திரியும் ரணிலும் இணைந்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டும்

0
332

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து ஆட்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறைகள் இருப்பின் அவற்றை சரிசெய்து முன்னோக்கிச் செல்வதே சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் இருவருக்கும் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களையே தெரிவித்து வருவதாகவும் இது தமது கட்சியின் கருத்து அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு அரசியல் நிலவரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (DC)