6 மாதத்துக்கான மருந்துகளை சேமியுங்கள் – சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு

0
196
சுகாதார சேவைகளுக்காக ஆறு மாத காலத்திற்கு தேவையான மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்குமாறு  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அதிகாரிகளுக்F உரத்தரவுவிட்டுள்ளார்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்நாட்டு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும். அதற்குத் தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ மனைப் பணிப்பாளர்கள் மருந்து விநியோகப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்தவிதத்திலும் மருந்துத் தட்டுப்பாடு இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் மருந்து விநியோகத்தை சீராக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அமைச்சர் சர்வதேச மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்து வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பிரத்தியேக பிரிவை ஸ்தாபிக்குமாறும் அமைச்சர் குறிபிட்டார்.