கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மகா சிவராத்திரி : பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்கேற்பு

0
298

(படுவான் பாலகன்) இந்து மக்களினால் அனுஸ்டிக்கப்படும் மகாசிவராத்திரி விரதப்பூசைகள், இந்து ஆலயங்களில் மிகச்சிறப்பாக இன்று(13) செவ்வாய்கிழமை இடம்பெறுகின்றன.
கிழக்கிலங்கையிலும் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரி விரதப் பூசைகள் இன்று இரவு இடம்பெறவிருக்கின்றதாக ஆலய வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.
நான்கு யாம பூசைகளும், பக்தர்களின் கண்விழிப்புக்காக இன்றைய பூசை உபயகாரர்களாகிய உலகிப்போடி குடிமக்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட பரதகலாலய மாணவர்களின் பரதநாட்டியாஞ்சலியும் நடைபெறவுள்ளது. மேலும் சமயச்சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.
இன்று காலையிலிருந்து நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டும் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.