நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு

0
628

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில்  அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன்போது நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்களையும் இன்று (11) அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.