அதிகாலை 2 மணியை கடந்த நிலையிலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதற்கு காரணம் – ஆணையாளர் விசேட அறிக்கை

0
220

தற்பொழுது அதிகாலை இரண்டு மணியை கடந்த நிலையிலும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகின்றது

அதிகமான நிலையங்களில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டாலும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் மூலம் அவற்றை அறிவிக்கும் செயன்முறையில் தாமதம் நிலவுவதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாக தேர்தல் ஆணையாளர் சற்றுமுன்னர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வட்டாரங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து பெறுபேறுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மற்றும் தொலைபேசி மூலமாக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் குறித்த அப்பெறுபேறுகளை உற்றுநோக்கி தபால் மூல வாக்களிப்பு முடிவுகளுடன் இணைத்து வெளியிடவேண்டியுள்ளதுடன் சில மாவட்ட செயலகங்களில் இருந்து பூரண தேர்தல் முடிவுகள் கிடைக்காமையினால், முழுமையான பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தெரிவத்தாட்சி அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

ஆகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு போதிய கால அவகாசம் தேவையென்பதுடன் வட்டார முடிவுகளை கணனி மயப்படுத்தி தரவுகட்டமைப்புக்கள் இணைக்க வேண்டியுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். ஆகவே தேர்தல் முடிவுகள் வெளியிடும் வரை பொறுமைகாக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விசேட ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.