வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு

0
477

எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில்  வாக்களிப்பில் ஈடுபட்டார்

வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.

அரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றல், அதற்கான நகர்வுகள் இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக இந்த தேர்தல் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது