வரிசையில் நின்று வாக்களித்த சனாதிபதி

0
345

பொலன்னறுவை நகரில் வித்யாசார பிரிவெனாவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜனாதிபதி  தனது வாக்கினை பதிவு செய்தார்.

மக்களுடன் வரிசையில் நின்று சனாதிபதி வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

 

”அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் இன்று தேர்தல் நடைபெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

49 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு, விகிதாசார முறையிலான கலப்பு முறை தேர்தல் இம்முறை நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் வன்முறைகள் குறைக்கப்பட்டு, மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியுடனும், அச்சமின்றி, யாருடைய தலையீடுமின்றி வாக்களிப்பதற்கு மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மக்களின் மும்முரமான வாக்களிப்பின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்தார்.