வவுனியா மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

0
335

வவுனியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்றுவருகின்றது.

5 உள்ளுராட்சி சபைகளுக்கும் 103 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இம்முறை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 599 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

குறித்த தேர்தலில் 2000 அரச உத்தியோகத்தர்களும் 1500 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.