மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன்   வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுவருகின்றது

0
223
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 பிரசே சபைகள் அடங்கலாக 12 சபைகளுக்குமான தேர்தல்  விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்,  இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று காலை 7மணி தொடக்கம் வாக்களிப்புக்கள்  வன்முறைகள் எதுவுமின்றி நடைபெற்று வருகின்றது.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் மட்டக்களப்பு, இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 4437 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு பணிகளும் இடம்பெற்று வருகின்றது.