அம்பாறை மாவட்டத்தில் 378பிரதிநிதிகளைத்தெரிவுசெய்ய 529வாக்களிப்புநிலையங்களில் 5லட்சம் வாக்காளர்கள்!

0
377
அம்பாறை உதவி தேர்தல் ஆணையாளர் திலின கூறுகிறார்!
(காரைதீவு   சகா)
 
நாளை(10) சனிக்கிழமை நடைபெறவிருக்கும்  உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 378பிரதிநிதிகளைத்தெரிவுசெய்ய 529வாக்களிப்புநிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இவற்றில் 4லட்சத்து 93ஆயிரத்து 742வாக்காளர்கள்  வாக்களிக்கவுள்ளனர்.
 
என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலினவிக்ரமரத்ன தெரிவித்தார்.
 
அவர் மேலும் குறிப்பிடுகையில்:
 
மாவட்டத்தில் இக்கலப்புமுறைத் தேர்தலில் வட்டாரமுறை மூலம் 225 பிரதிநிதிகளும்  விகிதாசாரமுறைமூலம் 153பிரதிநிதிகளும் மொத்தமாக 378 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
 
மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களான 74ஆயிரத்து 946வாக்காளர்களைக்கொண்ட உள்ளுராட்சிசபை கல்முனை மாகநரசபையாகும். அங்கு 78வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.இங்கு 10பெண்கள் உட்பட 40பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 
 அதிகுறைந்த வாக்காளர்களான 5106 வாக்காளர்களைக்கொண்டது அக்கரைப்பற்று பிரதேசசபையாகும். அங்கு 5வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.இங்கு 2பெண்கள் உட்பட 8பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தலில்  மாவட்டத்திலுள்ள 20சபைகளிலும் 378ஆசனங்களை இலக்குவைத்து 2837 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பலகட்சிகளும் 16 சுயேச்சைக்குழுக்களும் களத்தில் குதித்துள்ளன.
மொத்தமாக 6கட்சிகளினதும் 4சுயேச்சை அணிகளினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
மூன்று இனங்களின் 6லட்சத்து 48ஆயிரத்து 57 பேரைக்கொண்ட  கொண்ட அம்பாறை மாவட்டத்தில் 44.0வீதம் முஸ்லிம்களும் 37.5வீதம் சிங்களவர்களும் 18.3வீதம் தமிழ்மக்களும் வாழ்ந்துவருகின்றனர்.
4415 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இந்த மாவட்டத்தில் 4 தொகுதிகளும் 20 உள்ளுராட்சிமன்றங்களும் 20 பிரதேச செயலகங்களும் 503 கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளன.
உள்ளுராட்சி மன்றங்களைப்பொறுத்தவரை கல்முனை அக்கரைப்பற்று ஆகிய 2 மாநகரசபைகளையும் அம்பாறை நகரசபையையும் மீதி 17 பிரதேசசபைகளையும் கொண்டது இம் மாவட்டம் என்றார்.