மூதூர்பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கங்கு வெலி பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த யானை

0
307

மூதூர்பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கங்கு வெலி அகத்தியஸ் ஸ்தாபனப்பகுதி வளவொன்றில் உள்ள புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் விழுந்த யானையை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று இரவு பி.பகல் 8.45 மணியளவில் இந்த யானை மின்சாரவேலியையும் தாண்டி பொதுமக்களின் சேனைச்செய்கை இடங்களுக்குள் புகுந்துள்ளது.இவ்வாறு புகுந்த யானை விவசாயி ஒருவர் புதிதாக தோண்டிய கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக குறித்த விவசாயிகள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த யானையை கிணற்றில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.இப்பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.