மட்டக்களப்பு மாவட்டத்தில்வாக்குப்பெட்டிகள் விநியோகம்

0
333
மட்டக்களப்பு மாவட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் 2018க்கான வாக்களிப்பு நிலையங்களுக்காக வாக்குப்பெட்டிகள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  457 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் மத்தி நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் ஆரம்பமாக மும்முரமாக நடைபெறுகின்றன.

மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 457 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு வரப்பட்ட பின்னர், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 மாநகர சபைகள் அடங்கிய 12 சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 144 வட்டாரங்களிலுமிருந்து 238 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தல் பணிகளுக்கென வெளிமாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வருகைதந்த 4437 உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பப்ரல், சீ.எம்.ஈ.வி.கபே, ரான்ஸ்பரன்சி இன்ரர்நசனல் ஆகிய உள்ளுர் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கெண்ணும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலுள்ள மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.