முனைக்காட்டில் வாகனமொன்று எரிப்பு?

0
794

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் வைத்து வாகனமொன்று எரிந்த சம்பவம் நேற்று(8) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
புதிதாக முனைக்காடு கிராமத்தில் தொலைத்தொடர்பு கோபுரமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த கோபுர அமைப்பு பணியில் ஈடுபட்டுகின்றவர்களின் வாகனமே இவ்வாறு எரிந்துள்ளது.
குறித்த வாகனம் இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதா? தானாக தீப்பற்றியுள்ளதா? என தெரியாத நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல் துறையினரும், மட்டக்களப்பு குற்றத் தடவயியல் காவல்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில், குறித்த பணியில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் தெரிவிக்கையில், தாம் நித்திரையில் இருந்த வேளை, ஏதோ பற்றி எரிகின்றதன் மணம்வீசியமையினால் வெளியில் சென்று பார்த்த போது, தமது வாகனம் எரிந்து கொண்டிருந்ததாகவும் உடனடியாக நீர் ஊற்றியும், மண்ணைக்கொட்டியும் தீயினை கட்டுப்படுத்தியதாக தெரிவித்தனர்.
வாகனத்தின் முன்பகுதியே இச்சம்பவத்தில் அதிகளவு எரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.