மட்டக்களப்பு 457 வாக்களிப்பு நிலையங்களில்389,582 பேர் வாக்களிக்க தகுதி,4437 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில்

0
572

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை இரண்டு நகர சபைகள் 9 பிரதேச சபைகள் உள்ளிட்ட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

238 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 901 பெண் வேட்பாளர்கள் உட்பட 2736 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 389,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெறவுள்ளன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டாரங்களில் 120 கொத்தணி வாக்கெண்ணும் நிலையங்களாக அமைக்கப்பட்டு அத்தோடு 24 வாக்குச் சாவடிகள் தனிப்பட்ட ரீதியாக அந்தந்த வாக்குச் சாடிவகளிலும் வாக்கெண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் தேர்தலுக்கான மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் வெளி மாவட்டங்களையும் சேர்ந்த 4437 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தேர்தலை கண்காணிப்பதற்காக பெப்ரல், சி.எம்.இ.வி, கபே மற்றும் ட்ராண்ஸ் பேரன்சி இண்ர நெசனல் போன்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் கண் காணிப்பாளர்களாக செயற்பட விருக்கின்றனர்.

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் மேற் கொண்டுள்ளது

இந்த தேர்தலில் வாக்களார்கள் ஒரு புள்ளடியை மாத்திரமிட்டு தமது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும்.

10ம் திகதி சனிக்கிழமை காலை 7மணி முதல் மாலை 4மணி வரை வாக்காளர்கள் சென்று சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.

பிற்பகள் 4.30 மணியிலிருந்து அந்தந்த வட்டாரங்களிலேயே வாக்கெண்ணும் பணிகள் இடம் பெற்று அதற்கான முடிவுகள் அந்தந்த வட்டாரங்களிலேயே அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தமான முடிவுகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் வைத்து வெளியிடப்படும்

இது வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 225 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதில் 185 முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் பெறப்பட்டுள்ளன. ஏனைய முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவகின்றன.

இத்தகவல்களை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.