மாவடிமுன்மாரியில் அறுவடை நிகழ்வு

0
672

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அறுவடை நிகழ்வு இன்று(08) வியாழக்கிழமை மாவடிமுன்மாரியில் இடம்பெற்றது.
பாரம்பரிய முறையில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மை செய்கையே அறுவடை செய்யப்பட்டது.
வழிபாட்டு முறைகளை தொடர்ந்து, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன் மற்றும் விவசாயி ஞா.பேரின்பம் ஆகியோர் அறுவடை செய்து ஆரம்பித்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து செயலக உத்தியோகத்தர்களும் அறுவடை செய்தனர். இதன் போது அறுவடைக்கேற்ற பாடல்களும் பாடப்பட்டன.