திருகோணமலை கன்னியா பூர்விக மையம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதுதொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

0
217

திருகோணமலை கன்னியா பூர்விக மையம் கபளீகரம் செய்யப்பட்டு வருவதுதொடர்பாக நாங்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

அதனை முன்னர் இருந்த நிருவாகத்திடம் கையளிப்பதற்கான நிலமை விரைவில் மேற்கொள்ளப்படும்

என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.கன்னியா ,திருக்கோணேஸ்வரம்,சூடைக்குடா மத்தள மலை முருகன்ஆலயம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழர்களின் வரலாற்று பூர்விக மையங்கள் தொல்பொருள்கள் என்றபோர்வையில் அபகரிக்கப்பட்டுவருவது தொடர்பாக எதிர்கட்சித்தலைவரிடம் புத்திஜீவிகள் பலரும் சந்தித்து தமது கவலையை வெளியிட்டனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியட்ட வேளையிலேயே மேற்படி விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், மகிந்த ராஜபக்ஷவின் உச்சகட்ட தமிழ் மக்கள் மீதான அராஜகத்தின் வெளிப்பாடே கன்னியாவின் தற்போதைய நிலமையாகும்.

சமிபத்தில கொழும்பில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் புதைபொருள் ஆராய்ச்சிதிணைக்களத்தைச்சார்ந்த உயரதிகாரிகள் மத்தியில் இவ்விடயத்தை நாம்வலியுறுத்தினோம்.

விரைவில் இதுவிடயமாக ஒரு முடிவு எடுக்கப்படும். மீண்டும் அந்த நிருவாகம் உரிய அமைப்பிடம் பரிபாலனத்திற்காக கையழிக்கின்ற ஒரு நிலமை ஏற்படுத்தப்படும்.அது விரைவில் நடைபெறவேண்டும்.

இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துவருகின்றோம். இது தொடர்பாக மேலும் பகிரங்கமாக விரிவாக எதனையும் நான் கூறவிரும்பவில்லை.

எனவும் குறிப்பிட்ட அவர். இது மகிந்த ராஜபக்ஷவின் உச்சகட்ட அராஜகத்தின் வெளிப்பாடாகும். எனவும் குறிப்பிட்டார்.

குறித்த கன்னியா வென்நீர் ஊற்று இந்துக்களின் பல ஆயிரமமாம்ஆண்டு பூர்வீக வரலாற்றைக்கொண்ட புண்ணிய பூமியாகும். இதனை இறுதி யுத்தத்தின் பின்னர் பலாத்காரமாக பறித்து பௌத்த ஆலயமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களம் தமது பொறுப்பில் எடுத்து பராமரித்து வருகின்றது.அதற்காக பொதுமக்கிடம் பணமும் வசூலிக்கின்றது.

இந்துக்களின் எந்தவித அபிவிருத்திநடவடிக்களும் முன்னெடுக்க முடியாமல் உள்ளன.

அதேபாணியில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் அபிவிருத்தியிலும்பல்வேறு நெருக்கடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அண்மையில் ஆலயத்தின் பணிப்பாளர் சபைத்தலைவர் க.அருள்சுப்பிரமணியம் அன்னதான மடத்தை புனரமைக்கும்போது அதின் மேல்படந்திருந்த மரததின்கிளையை அனுமதியின்றி வெட்டியதாக குற்றம்சாட்டி திருகோணமலை நீதிமன்றில் தண்ணடம்விதிக்க தொல்பொருள்திணைக்களம்நடவடிக்கைஎடுத்திருந்தது.

இது கடந்த இருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்றன. இதனால் நகர மக்கள் தொல்பொருள்திணைக்களத்தின் நடவடிக்கை மீது மிகுந்த அதிர்ப்பிதியில் இருப்பதனையும் எதிர்கட்சித்தலைவருக்கு புத்திஜீவிகள் தெளிவு படுத்தினர். இவ்வாறே மத்தள மலை முருகன் ஆலய நிலமையும் உள்ளன. எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.