எமது உரிமைக்காக கொள்கையடிப்படையில் செயற்பட்டு வந்த மக்கள் நீங்கள் போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது.

0
710

“எமது மக்கள் நீண்டகாலமாக எமது உரிமைக்காக கொள்கையடிப்படையில் செயற்பட்டு வந்த மக்கள். அவ்வாறான நீங்கள் போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைப பிரிவில்வரும் புளியங்குளம் வட்டாரத்தில் ஒரு கட்சி மக்களின் காணிப்பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் அதற்கு தமக்கு வாக்களிக்குமாறு கோருவதாக நான் அறிகிறேன். அது பொய்யான பிரச்சாரமாகும்.அதனை நீங்கள் நம்பி ஏமாறவேண்டாம்.

என எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். மேற்படி பிரதேச சபையின் புளியங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புளியங்குளம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேற்படி விடயத்தை அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா,யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னாள் கிழக்குமாகாண சபையின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,டாக்டர் ஜி.ஞானகுணாளன் உட்பட பல முக்கியஸ்தர்களும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இங்குமேலும் பேசிய சம்பந்தன் குறிப்பிடுகையில்,

இபட்டணமும் சூழலும் பிரதேச சபை எமது கூட்டமைப்பின் கைகளுக்குவரக்கூடிய சபையாகும் .இங்கு அதிகளவிலான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். 26வீதமானவர்கள் சிங்கள மக்களும்,14 வீதமானவர்கள் முஸ்லீம்மக்களும் வாழும் பிரதேசமாகும்.

எம்மைப்பொறுத்தவரை பட்டணமும் சூழலும் பிரதேச சபை ஒருமுக்கியமான பிரதேச சபையாகும். இது திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பிரதேசமாகும்.கணிசமான தமிழ் கிராமங்கள் இப்பிரதேசத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.கன்னியா உட்பட பலமுக்கிய கிராமங்கள் உள்ளன.

கிழக்குப்பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் இங்குள்ள கோணேசபுரியில் அமைந்துள்ளன. இதனைச்சூழவுள்ள பல கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டியுள்ளன. எதிர்வரும் காலத்தில் பலவிதமான அபிவிருத்தி வேலைகள் இந்தப்பிரதேசத்தில் இடம்பெறவேண்டும்.

நாங்கள் வெல்லக்கூடிய பிரதேச சபைகளில் இதுவும் ஒன்றாகும்.வட்டார ரீதியாக மூன்று வட்டாரங்கள் இரட்டை அங்கத்தவரைக்கொண்டவையாகவுள்ளன.புளியங்களம்,சிங்கபுர,பெரிய குளம் என்பனவாகும்.பெரியகுளத்திலும் புளியங்களத்திலும் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்.

புளியங்குளத்தில் 6ஆயிரம் தமிழ் வாக்காளர்கள்.ஆகவே இந்த இரட்டை உறுப்பினர்களைக்கொண்ட பகுதிகளில் நாங்கள் வெல்லக்கூடிய நிலமைகள் அதிகம் உள்ளன. இவ்வாறான நிலையில் இந்த பிரதேச சபையை நாம் நிற்சயமாக கைப்பற்றியே யாகவேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்

புளியங்குளத்தில் மக்களின் காணி பிரச்சனைகளை தீர்த்து தருவதாக ஒரு கட்சி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. அந்தக்கட்சியைச்சார்ந்த அதன் தலைவர் 10 வருடங்களாக மகிந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர். அப்போதெல்லாம் தீர்க்காத ஒருவர் தற்போது தேர்தல் காலத்தில் தீர்ப்பதாக கூறுவது ஒரு பொய்யான பிரச்சாரமாகும்.

இதனை நம்பி நீங்கள் ஏமாறவேண்டாம். காணி பெற்றுத்தருவோம் நீங்கள் எமக்கு வாக்களியுங்கள் என நான் கூறமாட்டேன். இந்தக்காணிகளைப்பொறுத்தமட்டில் இது தமிழ் பல்கலைக்கழக நிறுவனத்திற்கு ச்சொந்தமான காணி இதனை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு பல தனியாரிடம் இருந்து நாம் கொள்வனவு செய்திருந்தோம். நான் அக்காலத்தில் சட்டத்தரணி என்ற வகையில் இதன் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன்.

ஒரு ஏக்கர் 1000ருபாவிற்கு நாங்கள் கொள்வனவு செய்திருந்தோம். தற்போது எமது மக்கள் வாழ்கின்றனர். இல்விடங்களை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்கள் அக்காணியை பராமரித்து வருகின்றனர். அக்காணிகள் அவர்களுக்கு செல்வது என்பது நியாயமான கோரிக்கையாகும்.

அதனைச்செய்ய அரசாங்க அதிபர்,மற்றும்பிரதேச செயலாளர்மூலமாக நடவடிக்கை எடுப்பதன்மூலம் அதனை அம்மக்களுக்கு வழங்க முடியும். அதனை குறித்த கட்சியின் தலைவர் நீண்டகாலம் அமைச்சாரக இருந்தவர் என்ற அடிப்படையில் செய்திருக்க முடியும் ஆனால் அவர் செய்யவில்லை.

தற்போது தேர்தலுக்காக பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்குகின்றனர். அதனைநம்பி நீங்கள் ஏமாறவேண்டாம். ஏதிர்காலத்தில் அதற்கான நிலையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீண்டகாலமாக அதாவது 1956இலிருந்து கொள்ளைக்காக எமது விடுதலைக்காக வாக்களித்து வந்த நீங்கள் இவ்வாறான போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது.

கடந்தகாலத்தில் நெருக்கடியான காலத்திலும் எமது கட்சியினால் வெல்லப்பட்ட இப்பிரதேச சபையானது. தற்போது அபிவிருத்தி காணக்கூடிய இக்காலத்தில் நிற்சயமாக வெல்லப்படவேண்டும்.

இந்த சபையிலே நேரடி உறுப்பினர்களாகவும் பட்டியல் மூலமாகவும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவாகி வெல்வது உறுதியாகும். குறித்த கட்சி ஒரு ஆசனத்தைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாது எனவும் உறுதிபடத்தெரிவித்தார். இந்தப்பிரதேச சபையைப்பொறுத்தவரை 12பேர் வட்டார ரீதியாகவும் 8பேர் விகிதாசார ரீதியாக தெரிவு செய்யப்படுவார்கள்.ஆட்சியை முறையாக நடாத்துவதற்கு குறைந்தது. 12,13பேரையாவது நாம் பெறவேண்டும் அவ்வாறு பெறுவதற்கு சந்தர்பம் உள்ளது. விகிதாசார அடிப்படையில் வரும் எட்டுப்பேரில் குறைந்தது 5பேரையாவது நாங்கள் பெறவேண்டும். இதற்கு தமிழ் மக்கள் குறைந்தளவில் வாழும் கிரமாமமக்களும் அதிகளவில் வாக்களித்தால் அதனை நாம் பெறமுடியும். ஆகவே போலியான தெளிவற்ற பிரச்சாரங்களை நம்பி நீங்கள் ஏமாறக்கூடாது முழுமையாக வாக்களிக்க வேண்டும்.

இந்தச்சபையில் நாங்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கூட நாம் கவனயீனமாக இருந்தால் அந்த பெரும்பான்மை பலத்தை நாங்கள் அனுபவிக்கமுடியாமல் போகலாம் எனவே தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அவ்வாறு இல்லாத பகுதிகளிலும் மக்கள் அதிகம் வாக்களிப்பதன் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவத்தை நாம் அதிகம் பெறமுடியும். அவ்வாறு வரும்போது சிறந்த தடங்கலற்ற ஆட்சியை நாம் செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் வலியுறுத்தினார்.