வட்டாரமுறைத் தேர்தலில் யாரைத் தெரிவுசெய்யவேண்டும்?

0
828
உள்ளுராட்சித்தேர்தல் என்பது வட்டாரமுறையில் உறுப்பினர்களைத்தெரிவுசெய்து  தங்களுடைய உள்ளுர் வட்டாரத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதலே ஆகும். தவிர தேசிய சர்வதேச பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளவல்ல என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.
 
குறிப்பிட்ட உள்ளுராட்சிக்குள்  வதியும் வரியிறுப்பாளர்களாகிய பொதுமக்களுக்கு ஊழலற்ற – வினைத்திறன்மிக்க  அடிப்படைப் பொதுவசதிகள்- பொது சேவைகளைப் பாரபட்சமின்ற்றி வழங்குகின்ற  ஒரு அரசியல்நிர்வாகப் பொறிமுறையாகும.
 
அந்தக்காலத்தில் இதற்கு வி.சி. எலெக்சன் என்று சொல்வார்கள். அதில் தெரிவுசெய்யப்படுவர்களை (ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட) வார்ட் மெம்பர் என்று சொல்வார்கள்.
அதனைத்தான் இன்று உள்ளுராட்சிமன்றத்தேர்தல் என்று சொல்கிறோம். அதுவும் இம்முறை அது கலப்புமுறைத்தேர்தலாக வருகிறது.
 
ஆதலால் கிராமத்திற்குள் அதுவும் வட்டாரத்திற்குள் குத்துவெட்டுக்கள் ஏராளம். குடும்பம் பிரிகிறது சொந்தங்கள் விலகுகின்றது. சில எதிர்மாறு. பிரிந்த சொந்தங்கள் உறவுகள் சேர்கின்றன. பல நட்புகள் பிரிகின்றன. சில நட்புகள் வலுவாகின்றன. தாய் ஒருகட்சி தகப்பன் ஒரு கட்சி பிள்ளைகளோ மற்றக்கட்சி. மனஸ்தாபங்கள் அதிகம்.
இவ் உள்ளுராட்சிசபையால்  செய்யக்கூடிய சேவைகள் என்ன என்பதை முதலில் அறியவேண்டும். அதற்காக பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்து தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதலே இத்தேர்தலின் நோக்கமாகும்.
 
உண்மையில் உள்ளுராட்சி மன்றத்தினால் ஆற்றப்படக்கூடிய சேவைகள் என்ன என்பதை பொதுமக்கள் அறியவேண்டும் என்பதற்காக இப்பட்டியில் தரப்படுகின்றது.
 
உள்ளூராட்சி மன்றங்களா ல் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்:
 
01 .பொதுச் சுகாதாரம்
02 .திண்மக் கழிவகற்றல்
03. கிராமிய பாதைகளை அமைத்தலும் பராமரித்தலும்
04. வடிகானமைத்தல் பராமரித்தல்
05 .தெருக்களுக்கு வெளிச்சம் தருதல் 
06. சிறுவர் பூங்காக்களை உருவாக்குதலும் பராமரித்தலும்
07. விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
08.இடுகாடுகள்இசுடுகாடுகளை அமைத்தலும் பராமரித்தலும்
09. நூலக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
10. பொது மல சல கூடங்களை அமைத்தலும்இபராமரித்தலும்.
11. கிராமிய நீர் வினியோகம்
12. பொது நீராடல் நிலையங்களை அமைத்தல்
13. தீயணைப்பு சேவைகள்
14. முன் பள்ளிகளை உருவாக்குதலும் பராமரித்தலும்
15. தாய் சேய் நலப்பணி
16. பொதுக் கட்டிடங்களை நிர்மாணித்தலும் பராமரித்தலும்
17. தொற்று நோய் தடுத்தல்
18. திடீர் அனர்த்த முன்னாயத்தமும் செயற்பாடுகளும் 
19. தொல்லைகளைத் தவிர்த்தல்
20. பெண்கள் அபிவிருத்தி
21. கிராமிய மின்சாரம் வழங்கல்
22. வீடமைப்புத் திட்டம்
23. கல்வித் தளபாடங்கள்
24.அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு நடைமுறைப்படுத்தல்
25. கால்நடை பன்ணைகளை நடாத்துதல்
26. அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்தல்.
27. சமய விழாக்களை ஏற்பாடு செய்தல்
28. கிராம அபிவிருத்திச் சங்கங்களை ஸ்தாபித்தலும வழிநடத்தலும்
29. வறியோருக்கு நிவாரணம் வழங்கல். 
 
மேற்கூறிய சேவைகளை சுயநலம் அற்று பொதுநலத்துடன் சேவையாற்றக்கூடிய சிறந்த மக்கள் சேவையாளனை உங்கள் பிரதிநிதியாக பிரதேச சபையிற்கு தெரிவு செய்யுங்கள்.
உள்ளுராட்சிச் சபையொன்றின் வட்டாரமொன்றில் போட்டியிடும் எல்லாத் தமிழ்க்கட்ச்pகளையும் மற்றும்ஊர் மக்களால் நிறுத்தப்n;பற்ற சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த எல்லாவேட்பாளர்களையும் மதிப்பீடு செய்து – எடைபோட்டு – அவர்களுக்குள்ளே ஆளுமை – ஆற்றல்;- அரப்பணிப்பு – அனுபவம்pக்க  ஊழல்அற்ற வினைத்திறன்ம்pகக் சிறந்த செயற்பாட்டாளர் ஒருவரைத் தேர்வு செய்து அந்தச் சிறந்த வேட்பாளர் எந்தத் தமிழ்க்கட்சியில் அல்லது சுயேச்சைக்குழுவில் போட்டியிடுகிறாரோ அந்தத்தமிழ்க்கட்சியின்  சின்னத்திற்கு அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு அந்தக் குறிப்பிட்ட  வட்டாரத்தில் வாக்களிக்க வேண்டும். 
 
தமிழர்களின் அரசியல் சற்றுவித்தியாசமானது. பலசந்தர்ப்பங்களில் வாய்ப்புகளை தவறவிட்டு தேசியத்தை மட்டுமே பேசி மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்ததே மிச்சம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அவர்களும் அதனையே துரும்பாகப் பாவித்து தெரிவாகின்ற வரலாறு தொடர்கின்றது.
 
இன்று ஒருகட்சிக்கெதிராக அதிலிருந்து வெளியேறியவர்கள் 2கோடி ருபா விவகாரத்தை பூதாகரமாக கிளப்பிவிட்டுள்ளனர். அது பற்றிஎரிந்துகொண்டிருக்கிறது.
வடக்கு கிழக்கு மாகாணசபைகளைப்பொறுத்தவரை மக்களின் பார்வையில் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லையென்று குற்றம்சாட்டப்படுகிறது. மாகாணசபை தமது அரசியல் இயலாமையை மறைக்க எதிர்ப்பரசியல் செய்முன்வந்துள்ளது.
அதேபோன்று எதிர்ப்பரசியலைச்செய்து உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றி தங்களுக்கேற்றவாறு அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி புகழோடுவாழலாம்என் எண்ணித்தலைப்பட்டுள்ளது ஒரு கும்பல்.
கட்சிகள் ஒருபோதும் திருந்தாது. அவர்கள் நலனுக்காக மட்டுமே சிந்திப்பார்கள். மக்களையிட்டு அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார்கள். தேர்தல்காலத்தில் மட்டும் வந்து பணத்தையும் தகரத்தையும் சாராயத்தையும் வழங்கும். எனவே அவைகள்  மாறமாட்டாது. பிரதிநிதிகள் மாற மாட்டார்கள். அவர்கள் அப்படித்தானிருப்பார்கள். 
எனவே மக்கள்தான் மாறவேண்டும். மகக்ள் சிந்திக்கவேண்டும். .மொத்தத்தில் மக்கள் இன்னும் தெளிவடையவில்லை.
 
சிறந்த வேட்பாளரைக கொண்ட தமிழ்க்கட்சி அல்லது சுயேச்சைக்குழு குறிப்பிட்ட உள்ளுராட்சி சபையொன்ற்றில் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறு படலாம். இதில் வட்டாரமொன்றில் அதிசிறந்த வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுதலே முக்கியமானது. எனவே கட்சியை மட்டும் பார்க்காமல் வேட்பாளரின் தகுதியையும் பார்த்து வாக்களிக்க வேண்டும். 
 இப்படி வாக்களிப்பதன் மூலம் உள்ளுர்  மட்டத்தில்  உருவாகும் சிறந்த தலைவர்கள் தேசியமட்டத்த்pறகு எதிர்காலத்தில்  வரும்N;பாது வினைத்திறன்மிக்க மாற்று அரசியல் சக்தியொன்று தானாகவே மேற்கிளம்பும். அத்துடன் தமிழர் அரசியலில் பன்முகத்தன்மை ஏற்பட்டு தமிழர் அரசியல் ஆரோக்கியம் பெறும்.
 
இதன் உடனடிப் பலன் என்னவெனில்  ஊழல்  அற்ற வினைத்த்pறனம்pக்க மக்களுக்கு  உச்சசேவையை வழங்கக்கூடிய அரசியல் நிர்வாகம் ஒன்று உள்ளுராட்ச்pச்சபையில் அமையும.; இதுவே கட்ச்p அரசியலுக்கு அப்பாலான தமிழ்மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.
அதைவிடுத்து சர்வதேசம் இனப்பிரச்சினைத்தீர்வு ஜ.நா. வடக்குகிழக்கு இணைப்பு பற்றியெல்லாம் அளக்கவேண்டிய களமல்ல இது. இந்தத்தேர்தலுக்கும் இந்தக்காணங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதை அவர்கள் அறிவார்கள். இருந்தும் மக்களை உசுப்பேற்றும் தந்திரப்பொறிமுறைகளில் இதுவுமொன்று. தற்போதெல்லாம் தமிழ்மக்களுக்க இதெல்லாம் கேட்டுக்கேட்டு புளித்துப்போயுள்ளது. இம்முறை அது பெரிதாக தாக்கம் செலுத்தாது என்றே கருதவேண்டும்.இத்தேர்தலில் அதனைப்பேசி வாங்கிக்கட்டிக்கொண்டவர்களே அதிகம்.
 தேர்தல் என்பது மக்கள் தெளிவடைவதற்கான சந்தர்ப்பம். தங்களுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்வதற்கான ஒரு வாய்ப்புஇ அதேவேளை தாங்களே வெற்றியடைவதற்கான ஒரு வாய்ப்பும்கூட. இதைச்சரியாக புரிந்துகொள்ளாமல் காற்றடிக்கும்பக்கம் சாய்ந்தால் எமது எதிர்காலம் சூனியமாகிவிடும்.
 
1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப் பெற்றிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2007ம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பு நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகிறது. 
உள்ளுராட்சி சபை தேர்தலைத் தொடர்ந்து அடுத்த வருடம் நடுப்பகுதியில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளில் நேரடித்; தெரிவும்இ மாவட்ட மட்டத்திலான விகிதாசாரமும் 50:50 கலந்த கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
;’எதிர்வரும் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் சார்பில் அதிஉச்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின்கீழ் ஒன்றிணைந்து ஓரே அணியில் போட்டியிட வேண்டும். இதனைச் சாத்தியப்படுத்தும் வகையில் மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். 
 
என்று அண்மையில் உதயமான  ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ புறப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் மக்களுடனான சந்திப்பை நடாத்தியுள்ளது. சட்டத்தரணி சிவநாதன் எழுத்தாளர் செங்கதிரேன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோர் இம்முயற்சிக்கு இணைப்பாளர்களாக உள்ளனர்.
 
தலைவர்கள் திருந்தப் போவதில்i;ல. மக்கள்தான் இனி விழிப்புணர்வு பெறவேணடு;ம.; தற்போதுள்ள  தலைவர்களைத் திருத்தவேண்டும்.  புதியதலைவரக்ளை அடையாளம் காணவேண்டும் இதனை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்வரும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் ஓர் அரியவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. 
இதில் வடக்குக்கிழக்குத் தமிழர்கள் மிகக் கவனமாகத் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
 
வினைத்திறன்மிக்க மாற்றுத்தலைமைத்துவத்தினை அல்லது  மாற்று வழியினை அடையாளம் காணுவதற்குரிய அடித்தளம் இத்தேர்தலில் இடப்படல்வேண்டும.
தமிழர் அரசியலில் பன்முகத்தன்மையை உருவாக்குவதற்கு இத்தேர்தலைப் பயன்படுத்தவேண்டும். கட்சியரசியலுக்கு அப்பால் உள்ராட்சிச் சபைகளில் ஊழல் அற்ற வினைத்திறன்மிக்க  அரசியல்நிர்வாகம் அமையும் வகையில் தமிழர்களுடைய வாக்குப்பதிவு நடைபெறவேண்டும். 
கிழக்குமாகாணத்தைப்;பொறுத்தவரையில இத்தேர்லில்விசேட கவனம்செலுத்தவேண்டியுள்ளது. அது என்னவெனில் அடுத்தவருடம் நடுப்பகுதியில் நடைபெறலாம் என எதிர்ப்hர்க்கப்படும் கிழக்குமாகாண சபைத தேர்தல்pல் அதன்ஆட்ச்p அதிகாரத்தை தமிழர்கள் தம்வசம் தக்கவைத்துக் கொள்வதற்கான கிழக்குமாகாணசபையின் முதலமைச்சராக தமிழர் வருவதற்கான – அடித்தளம் இத்தேர்தலில் இடப்படவேண்டும் என தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்பு முறை வித்தியாசமானதாக இருத்தல் வேணடு;ம.; 
சில தமிழக்கட்ச்pகள்கூறுவதுபோல உள்ராடச்pச்சபைத்தேரத்லுக்கும் அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும் சம்பந்தமேயில்லை. அரசியலமைப்பு;ச சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையைத் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா என்பதை அறிவதறக்கான அளவுகோலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலைக் கருதமுடியாது. இதில் வடக்குக்கிழக்குத் தமிழர்கள் முதலில்தெளிவடையவேணடு;ம் என இவ் ஒன்றியம் கூறுகின்றது.
 
 
தமிழினம் அரசியலில் இன்று வேண்டிநிற்பது வெறுமனே வினைத்த்pறனற்ற கல்வ்pமான்களையோ – புத்திஜீவீகளையோ – ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரிகளையோ – ஒப்பந்த்க்காரர்களையோ – தனவந்தர்களையோ – வர்த்கர்களையோ அல்ல. தமிழர்அரசியலில் இன்றைய தேவை ஆளுமை – ஆற்றல்- அனுபவம்- அர்ப்ப்ணிபபுடன் கூடிய சமூகநலநாட்டம் மட்டுமேயுடைய வினைத்திறன் மிக்கவர்களை.
இத்தகையோர் எல்லா அரசியல் கட்சிகளிலும் சிதறிக்கிடக்கிறார்கள். 
 
இத்தகையோர் தமிழர் அரசியலில் உள்வாங்கப்படுதல் அவசியம். சகல தமிழ் அரசியல் கட்சிகளையும்  ;- தமிழ்மக்களின ;நலன்சாரந்து இயங்குகின்ற சகல பொது அமைப்புகக்ளயும்- தனிநபர்களாக உள்ள சமூக நலநாட்டமுடைய துறைசாரந்புணரக்ள ;- எழுத்தாளரக்ள ;- கலைஞரகள் ;- ஊடகவியலாளர்கள் – வணிகப்பெருமக்கள ;மற்றும் ;விவசாயிகள்- மீனவரகள்உள்ளிட்ட  சகல தொழிலாளர்களையும் மற்றும் ஏனைய தரப்பினர்களையும் உள்வாங்கி ஓரணியின் கீழ் ஒன்றுபடுத்தலே உண்மையான ஒற்றுமையாகும். இதனால் மட்டுமே தமிழர் அரசியல் பலம்பெறும். ஆனால் இத்தகைய செயற்பாடு தமிழர் அரசியலில் இல்லாமல் போய்விட்டது. பதவிகளை நாடும் சுயநலத் தேர்தல் அரசியலே இன்று; தமிழ்ச்சூழலில மேலோங்கிநிற்கிறது.
 
அவை களையப்பட்டு வினைத்திறன்மிக்கதாக சபைகளை கொண்டுசெல்லக்கூடிய பிரதிநிதிகளை மக்கள் சுதந்திரமாக தெரிவுசெய்யவேண்டும். இதனையே தமிழ்ச்சமுதாயம் எதிர்பார்க்கிறது.
வி.ரி.சகாதேவராஜா