மட்டு.மாவட்டத்திலுள்ள ஆரம்பதர வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகள் தொடர்பாக மதிப்பீட்டுப்பணிகள்

0
543
மட்டு.மாவட்டத்திலுள்ள ஆரம்பதர வைத்தியசாலைகளின் சுகாதார சேவைகள்
தொடர்பாக மதிப்பீட்டுப்பணிகள் இடம்பெற்றுமுடிந்திருக்கின்றன..

 
முதற்கட்டமாக  சந்திவெளி செங்கலடி மாவடிவேம்பு மீறாவோடை நாவற்காடு
மண்டபத்தடி கரடியனாறு போன்ற பிரதேச வைத்தியசாலைகள் மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளன.இரண்டாம்கட்டமாக ஊனைய 6வைத்தியசாலைகளின் மதிப்பீட்டுபணிகளும் நிறைவடைந்துள்ளன.
 
மட்டு.பிராந்திய  சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேசின்
ஏற்பாட்டில் அம்மதிப்பீட்டுப்பணிகள் இடம்பெற்றது.
 
மொத்தமாக மட்டு.மாவட்டத்தில் பின்தங்கிய ஆரம்ப தர 15 வைத்தியசாலைகள்
மதிப்பீடு செய்யப்படவிருக்கின்றன. இதுவரை 9 வைத்தியசாலைகளுக்கான
மதிப்பீடுகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 6 நேற்றுடன் நிறைவுற்றன.
 
கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன்
களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்
ஜி.சுகுணன் ஆகியோர் இம்மதிப்பீட்டுப்பணிகளில் ஈடுபட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இவ்வைத்தியசாலைகளின்
சுகாதாரப்பராமரிப்பு சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துமுகமாக
இம்மதிப்பீட்டுப்பணி நடைபெற்றுவந்திருந்தன.
அதேவேளை சிறந்த வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கவும் இம்மதிப்பீடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.