மஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும்அந்த முகவரி சிறைச்சாலைதான்

0
482

ஊழலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்களை சிறையில் போடும் ஆண்டாக இவ்வாண்டு காணப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ குழுவுக்கு இவ்வருடம் ஒரேயொரு முகவரியே இருக்கும். அவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் தடையின்றி தொடர்பு கொள்ளலாம். அந்த முகவரி வேறு ஒன்றும் அல்ல, சிறைச்சாலை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கிராம மக்களுடன் தொடர்புபடும் முக்கிய தேர்தலுக்கு நாட்டில் இல்லை. அவர் வெளிநாட்டில் இருக்கின்றார். தேர்தல் முடிந்த பின்னர் 12 ஆம் திகதி சுபநேரம் பார்த்து நாடு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்