கேப்பாபுலவு பிரதான பாதையை மீண்டும் மூடிய இராணுவம்

0
178


கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம் இன்று(04) 339 ஆவது நாளாகவும் தொடர்கிறது

இந்நிலையில் இன்றைய தினம் இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று இடம்பெறும் நிலையில் சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம் வெறுக்கிறோம் என தெரிவித்து தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முற்ப்பட்ட வேலை குறித்த இடத்துக்கு வந்த முள்ளியவளை பொலிசார் ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது என்று தெரிவித்த நிலையில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளதோடு மக்கள் இராணுவமுகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில் திறந்து விடப்பட்டிருந்த கேப்பாபுலவு பிரதான வீதியை மூடிய இராணுவம் மக்களை காட்டு வழியாக மீண்டும் செல்ல நிற்ப்பந்தித்துள்ளது