பாலங்களை உரிய முறையில் அமையுங்கள் –ஒதியமலை மக்கள்

0
163

.முல்லைத்தீவு, மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை கிராத்தில் வீதியிலிருந்து வீடுகளுக்கு செல்லும் வீதிகள் மற்றும் மக்களில் வாழ்விடங்கள் பொது இடங்களுக்கு செல்வதற்காக வீதி அபிவிருத்தி செய்பவர்களால் அமைக்கப்படும்  பாலங்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை எனவும் அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

 இந்த விடயம் தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில் வெலிஓயா பகுதியில் இருந்து தமிழர்களில் எல்லைக்கிராமங்கள் ஊடாக நெடுங்கேணி நோக்கிய வீதி காபட் வீதியாக புனரமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் ஒதியமலை கிராத்தில் வீதியிலிருந்து வீடுகளுக்கு செல்லும் வீதிகள் மற்றும் மக்களில் வாழ்விடங்கள் பொது இடங்களுக்கு செல்வதற்காக வீதி அபிவிருத்தி செய்பவர்களால் அமைக்கப்படும்  பாலங்கள் உரிய முறையில் அமைக்கப்படவில்லை எனவும் அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குறித்த பாலங்கள் உரிய முறையில் கட்டப்படாது வெறுமனே பால கொட்டுகள் மட்டும் வைக்கப்பட்டு மண் போட்டு நிரவப்படுவதாகவும் இரண்டு பால கொட்டுகள் வைக்கும் போது அவற்றை பொருத்துவதற்கான வளையங்கள் போடப்படாது மண் போட்டு நிரவிவிட்டு செல்வதாகவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்படும் மக்கள் கோருகின்றனர்