“ஒரே தேசம்” என்ற தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கில் 70 வது சுதந்திர தினம்

0
281

 

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 70 வது சுதந்திர தினம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற 70 வது சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டு இன்றைய காலநிலையின் காரணமாக ஒன்று கூடல் மண்டபத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டியும், நாட்டின் நல்லாட்சியுடன் அனைத்து மக்களும் தொடர்ந்து சுதந்திரக் காற்றை தொடர்ந்து சுவாசித்த வண்ணம் இருக்க சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசை நிகழ்வும் இடம்பெற்று, அதனை தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் சிற்றூண்டிகள் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.