தேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவலில் அனுப்பலாம்

0
528

தேர்தல் முறைப்பாடுகளை குறுந்தகவல் மூலம் (Sms) தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்த நடைமுறை வியாழன் முதல் (01) ஆரம்பமாகியள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை EC – EV – குறித்த மாவட்டம் –  எனக் குறிப்பிட்டு உங்கள் முறைப்பாட்டை டைப் செய்து 1919 என்ற இலக்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அல்லது வட்ஸ்அப் இல 0776 645 692 மற்றும் வைபர் 0712 550 780 ஊடாகவும் உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை புகைப்படங்களாகவோ காணொளிகளாகவோஅனுப்பி வைக்கலாம்.