பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் பாடசாலைத்தினம்

0
365

மட் /மமே/பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயத்தின் பாடசாலைத்தினம்  கடந்த  வியாழக்கிழமை(01) மு.ப. 9.00 மணிக்கு அதிபர் திரு மூ.சிவகுமாரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

 

இதில் பிரதம அதிதியாக மண்முனை தென்மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், திரு.ந. தயாசீலன் அவர்களும், கௌரவ அதிதிகளாக முந்நாள் அதிபர் திரு த.அருள்ராஜ், மற்றும் பண்டாரியாவெளிக் கிராமத்தின் முதல் பட்டாதாரியான திரு அ.செல்வநாயகம், ஆகியோரும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.தா.குணரெத்தினம் மற்றும் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகள் அழைத்து வரப்பட்டு, கொடியேற்றி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.இந்நிகழ்வின் போது முன்னர் கடமையாற்றிய ஒரு அதிபர் அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்து, வாழ்த்துமடல் கொடுத்து கௌரவிப்பது. வழமை. இவ்வருடம் திரு.த.அருள்ராஜ் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும், அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.