இரா.சாணக்கியன் இலங்கை தமிழரசு கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைவு

0
206

க.விஜயரெத்தினம்

பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும்,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளருமான இரா.சாணக்கியன் அவர்கள் இலங்கை தமிழரசு கட்சியில் உத்தியோகபூர்வமாக தமிழரசுக்கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா முன்னிலையில் களுவாஞ்சிகுடியில் வெள்ளிக்கிழமை (02.02.2018) மாலை 5.00 மணியளவில் தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு அரசியல் கூட்டத்திலேயே இவ்வாறு இணைந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்திலேயே 2010 முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமனம் பெற்றார்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தீவிரமான அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தவர்.

இதன்மூலம் மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக பாரிய அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்துவர்.2015ஆம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டவர்.வெள்ளிக்கிழமை முதல் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார்.இவர் இணைந்து கொண்டதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.