ராகல தோட்த்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கபட்ட 12 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் இடபெயர்வு

0
325
ராகலை ராகல தோட்டம் மேல்  பிரிவில் அன்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கபட்ட 12 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் தற்போது தோட்ட சனகமூக நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களில்  ஆண்கள் 17 பேரும் பெண் 24 பேரும் அடங்குவர். பாதிக்கபட்டவர்களுக்கான முதற்கட்ட நிவரணம் வழங்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர்¸ தோட்ட நிர்வாகம் உட்பட பொது மக்கள் மேற் கொண்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட நவடிக்கையாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவிசரிதலியல் அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கை மேற்க் கொண்டு இவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்க தோட்ட நிர்வாகம் உட்பட அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
மேற்படி பாதிக்கபட்ட மக்கiளை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம்¸ திருமதி சரஸ்வதி சிவகுரு குறித்த இடத்திற்கு விஜயம் செய்தனர் இதன் இவர்களுக்கான வீட்டு திட்டத்தை துரிதகெதியில் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்க் கொண்டனர்.