வவுனியா மாவட்ட மக்கள் சிவசக்தி ஆனந்தனை நிராகரிக்க வேண்டும்

0
407

ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர்,மட்டக்களப்பு மாவட்டம்


எதிர்கால அரசியல் பிழைப்புக்காக,அரசியல் இருப்புக்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் அவரது தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் அவரகளும் வடிகட்டிய பொய்களை ஊடகங்களில் கட்டவிழ்த்துத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து தலா 2 கோடி ரூபாய்கள் இலஞ்சம் பெற்றுள்ளதாக நாக்கூசாமல் பொய்யளந்து வருகிறார்கள். மக்களை ஏமாற்றி தேர்தலில் வாக்குகளை கபளீகரம் செய்யலாம் என்று இவர்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.இந்த வாய்ச்சவாடல்கள் தேர்தலில் பலிக்காது என்பதை தேர்தலின் பின்னர் இவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலஞ்சம் ( கையூட்டு) என்றால் என்னவென்று சிவசக்தி ஆனந்தனும் அவரின் தலைவர் சுரேசும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.ஒருவர் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக ஒளித்து மறைத்து இன்னொருவரிடம் பெற்றுக்கொள்ளும் நிதியினை, நிதிக்கையூட்டாகக் கூறமுடியும்.அப்படியான எந்த கையூட்டினையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பெறவும் இல்லை,பெறப் போவதுமில்லை.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து பெறப்படுகின்ற அரச நிதியினை அரசாங்கமானது மக்களின் நலன் சார்ந்த பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளை தீர்ப்பதற்காக பயன்படுத்தியேயாக வேண்டும். அவற்றை அரசிடம் இடித்துரைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் கடப்பாடாகும்.
அந்த வகையில் நீண்டகாலமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 30 வருடகால யுத்தத்தினால் பல்வேறு புறக்கணிப்புக்;களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். எப்போதுமே நாட்டை ஆளும் அரசாங்கம் தமது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கூடாகவும் அவர்களது கட்சி அமைப்பளர்களுக்கூடாகவும் அவர்களது பகுதிகளில் அபிவிருத்திப்பணிகளை மு;னனெடுத்து தமது கட்சியின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள எத்தனிப்பது வழமை. அந்த வகையில் தற்போதைய அரசும் தமது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அமைப்பாளர்கள் ஊடாக இத்தகைய அபிவிருத்தப் பணிகளை முன்னெடுத்த வேளையில், எமது பிரதேசங்களுக்கும் இத்தகைய அபிவிருத்திப் பணிகளை செய்ய அனுமதியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பிர்களாகிய நாமும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தமையினால் எமது 15 முன் மொழிவுகளுக்கான அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடாக அமுல்படுத்தப்பட்டன.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தான் பிரதிநிதிப்படுத்தும் வவுனியா மாவட்டத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை அபிவிருத்திப் பணிகள் பல இருந்தும் எவ்வித முயற்சியும் எடுக்காமல் சோம்பி இருந்து விட்டு ,தனது மக்கள் தன்;னை தூற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் பொய்யான ஒரு அரசியல் பிரசாரத்திற்காகவும் தனது கட்சித் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனுடன் சேர்ந்து ஒரு அரசியல் வங்குரோத்து நாடகத்தை செய்து வருகிறார்.இத்தகையவர்களின் நாடகத்தை தற்போது பாமர மக்களும் கூட புரிந்து கொண்டுள்ளார்கள்.இந்த வரவு செலவுத் திட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தபட்ட நிதிக்கான ஒதுக்கீடும் அங்கீகரிக்கப் படுகிறது.இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் இலஞ்சம் என கருதியிருந்தால் கடந்த காலங்களில் இவற்றுக்கான திட்டங்களை அமுல் படுத்துவதிலிருந்து விலகியிருந்தாரா? இனியும் விலகி இருப்பாரா?
இதே போல் கடந்த ஆண்டும் நெடுஞ்சாலைகள் உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல அவர்கள் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் எமது வேண்டுகோளுக்கமைய , எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வீதி அபிவிருத்திக்காக 60 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியபோது அதனை இலஞ்சமாக கருதி ஏன் அப்போது நிராகரிக்கவில்லை? அத்தோடு எனது தனிப்பட்ட முயற்சியிற்காக மேலும் 8.5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி எமது மாவட்ட வீதிகளை அபிவிருத்தி செய்ய உதவினார்.இவ்வாறு அரசிடம் இருந்து மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை பெற்றுக் கொடுப்பது மக்கள் பணியே தவிர இலஞ்சமல்ல என்பதை சிவசக்தி ஆனந்தனும் அவரது கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்கள் எமது தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வொன்றுக்கான முயற்சியினை தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டே, தற்போதைய அரசியல் நிலையினை பயன்படுத்தி நீண்ட காலம் எவிவித அபிவிருத்தியையும் காணாத எமது பிரதேசங்களின் அடிப்படைத் தேவைகளையாவது நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு அமைச்சிற்கும் அழுத்தங்களை பிரயோகித்தும் திட்ட முன்மொழிவுகளை கொடுத்தும் வீதிகள்,கிராமியப் பாலங்கள்,பாலங்கள் ,மதகுகள், வீட்டுத் திட்டங்கள், குடிநீர் விநியோகம், விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு,ஆலயங்களுக்கான நிதியளிப்பு, பாடசாலைகளுக்கான தேவைகள் ,கிராமிய மட்ட அமைப்புகளை பலப்படுத்துதல் போன்றவற்றை செய்து வருகிறோம்.இவற்றுக்கும் மேலதிகமாக எமது பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்து எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கவும் சுயதொழில் முயற்சிகளை எற்படுத்தவும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.இவையெல்லாம் எமது மக்களின் அவசியத் தேவைகள். அவற்றை அரசு வழங்கும் இலஞ்சம் எனக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தான் பிரதிநிதித்துவப் படுத்தும் வவுனியா மாவட்ட மக்களுக்கு என்ன சேவையினை செய்யப் போகிறார்? இவரது இயலாமையினால் அபிவிருத்தியினை பெறாத அவரது மாவட்ட மக்களும், எமது அபிவிருத்திப் பணியால் பயனடைந்த மக்களும் இந்த பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு தமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டியது தார்மீக கடமையாகும்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை மையமாக கொண்டு பொய்யொன்றை தேர்தல் பரப்புரையாக கொண்டு மக்களை ஏமாற்ற முனையும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் அவரது தலைவர் சுரேஸ்பிரேமச் சந்திரனுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
எனது திட்ட முன்மொழிவு மூலம் பயன்பெற்ற பிரதேசங்கள்.இவற்றைத் தான் அரசு எமக்கு இலஞ்சம் வழங்கியதாக மேற்படி பொய்யர்கள் இருவரும் புலம்பித் திரிகிறார்கள்.
1. இலுப்படிச்சேனை,கனித்தீவு வீதி கொங்கிறீட் இடல்,ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு – 1..5 மி
2. மாவளையாறு கிராம வீதி கொங்கிறீட் இடல், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு – 1..5 மி
3. மட்ஃமமேஃஅம்பாள் மகா வித்தியாலயம்,இலுப்படிச்சேனை, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு- 1. 5 மி
4. சுவாமி நடராஜனந்தாவீதி,விவேகானந்தபுரம்,நாவற்குடா கிழக்கு,மண்முனைவடக்கு பிரதேச செயலகப் பிரிவு- 1..5 மி
5. லயன் நிலைய 6ம் குறுக்கு வீதி கொங்கிறீட் இடல், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு-1..5 மி
6. காந்தி கிராம விளையாட்டு மைதான கம்பிவலை வேலி அமைத்தல் மண்முனை வடக்கு பிர.செயலகப் பிரிவு -1.5 மி
7. பன்சல குறுக்கு வீதி , கொங்கிறீட் இடல், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு – 1.0 மி
8. வெட்டுக்காடு பட்மிண்டன் உள்ளக விளையாட்டு அரங்கு அபிவிருத்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு 1.0 மி
9. கல்குடா உள்ளக பிரதான வீதி, கொங்கிறீட் இடல்,மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1..5 மி
10. மட்ஃமமேஃமகிழவட்டுவான் மகா வித்தியாலய சுற்று மதில், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1.5 மி
11. மட்ஃமமேஃவவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய சுற்று மதில், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1..5 மி
12. மட்ஃமமேஃபாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய சுற்று மதில், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1.0 மி
13. மட்ஃமமேஃ அம்பிளாந்துறை கனிட்ட வித்தியாலய சுற்று மதில், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1.0 மி
14. குறிஞ்சாதீவு,முனைக்காடு வீதி கொங்கிறீட் இடல், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவு – 1..5 மி
15. மட்ஃபாலமுனை அ.த.க பாடசாலைச் சுற்று மதில், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவு – 1..0 மி