வடிசாராயம் காய்ச்சிய நிலையில் ஒரு பெண் கைது

0
774

சட்டவிரோதமாக வடிசாராயம் காய்ச்சிய நிலையில் நேற்று (29) ஒருவர் கைதான சம்பவம் பனிச்சையடிமுன்மாரியில் இடம்பெற்றது.
அக்கிராமத்தில் செயற்படும் உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் கலந்துரையாட சென்றிருந்த போது ஒரு வீட்டில் நிறைந்த புகை வருவதை கண்டு சந்தேகித்ததன் அடிப்படையில் வீட்டை பரிசோதனை செய்த போது சமையலறையினுள் வடிசாராயம் காய்ச்சப்பட்டுக்கொண்டிருப்பதை அவதானித்தனர். பின்னர் இத்தகவலை கொக்கட்டிச்சோலை காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கியதையடுத்து அவ் வீட்டிற்கு வருகை தந்த காவல்துறையினர் வீட்டின் குறித்த நபரை சந்தேகத்தில் கைது செய்ததுடன் வடிசாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பொருட்கள், வடிசாராயம் என்பன காவல்துறை நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.