கொக்கட்டிச்சோலை படுகொலையின் 31 ஆவது நினைவஞ்சலி

0
594
   கொக்கட்டிச்சோலை பகுதியில்  1987ம் ஆண்டு தை மாதம் 28ம் திகதி  இலங்கை விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் 31ஆவது ஆண்டு நினைவு நாள்  பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக அமைக்க்கப்பட்ட நினைவுத் தூபிக்கு மலர் சூடி, தீபம் ஏற்றி நினைவஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு உரைகளும் நிகழ்த்தப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரத்தக் கறை படிந்த நாட்களின் நினைவுகளை இன்றும் அம்மக்கள் மறக்கவில்லையென்பதனை வருடாந்தம் நடைபெறும் படுகொலை நினைவு தினங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

1987 தை 28ல், வழமைக்கு மாறாக வெடிச்சத்தங்கள் இதனால் பயமுற்ற மக்கள் தாம் தொழில்புரியும் அருகிலுள்ள இறால் பண்ணைக்கு பாதுகாப்புத்தேடிச் சென்றனர்.

இந்த வேளையில், பண்ணையிலே வேலை செய்தவர்களும், பண்ணையினையருகிலுள்ள ஆண்களும் அழைக்கப்பட்டு மகிழடித்தீவு  சந்தியில் வைத்து  சுட்டு படுகொலை செய்தனர்.

இப்படுகொலையில் முதலைக்குடா, முனைக்காடு, மகிழடித்தீவு, அம்பிளாந்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த 87 பேர் உயிரிழந்தனர்.

இப்படுகொலை நாள் இப் பிரதேச மக்களால் விடுதலைப் புலிகளின் காலத்தில் நினைவு கூரப்பட்டு வந்த நிலையில் முன்னைய ஆட்சியில் இதற்கு தடைகளும் விதிக்கப்பட்டிருந்தது. இவ் ஆட்சியில் தற்போது தொடர்ச்சியாக நிளைவு கூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.