கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள்,மற்றும் ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள்; வாக்குக் கேட்டு வருகின்றார்கள்.

0
331
(க.விஜயரெத்தினம்)
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட புத்திஜீவிகள் பலரை கொலைசெய்து காணாமல் செய்தவர்கள் இன்று எம் மக்கள் முன் வாக்குக் கேட்டு வருகின்றனர்.

 இது எமது இனத்திற்குச் செய்த பெரும் துரோகமாகும் இவ்வாறான சக்திகளுக்குப் பாடம் புகட்டவேண்டும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
துறைநீலாவணையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் க.சரவணமுத்து அவர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (27.1.2018) ஆம் திகதி  வேட்பாளரின் வளாகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்திற்கு அதிதிகளாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், கிழக்குமாகாண முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமான கி.துரைராசசிங்கம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத் தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் பேசுகையில்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த பேராசிரியர்களான ரவிந்திரநாத், தம்பையா போன்றோர்களும் மட்டக்களப்பில் ஆளுமைமிக்க சிறந்த ஊடகவியலாளராகச் செயற்பட்ட ஐயாத்துரை நடேசன் உட்பட பல புத்திஜீவிகளை கொலை செய்தும் காணாமல் ஆக்கப்பட்டும் இருக்கின்றனர் . இவ்வாறு செய்தவர்களும் அதற்குத் துணைநின்றவர்களும் .இன்று தமிழ்மக்களை வழிநடாத்தப்போகிறார்களாம். அவர்களை ஆதரித்து வாக்களிக்கவேண்டும் என எமது இனத்திடம் கேட்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் மக்களின் காணிகள் சிறுதுண்டுகூட பறிபோகவில்லை.இன்று போராட்டம் மௌனித்ததற்குப்பின்னர் பேரினவாத சக்திகளுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலர் தமிழர்களின் நிலங்களை தாரைவாக்கும் செயல்களைச் செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல், வாழைச்சேனை, கல்குடா,தளவாய்,ஐயங்கேணி போன்ற பகுதிகளில் தமிழ்மக்களின் நிலங்கள் விற்கப்பட்டு இருக்கின்றது.கல்குடாப் பகுதியில் உள்ள பல ஏக்கர் காணிகளை தென்பகுதியில் இருக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது இவ்வாறு விற்று பணத்தினை சுருட்டி தங்கள்  சட்டைப் பைக்குள் வைத்தவர்கள் தழிழ் மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதுடன் தமிழ்க் கூட்டமைப்பினையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அவர்களைப் போன்றவர்களின் நடவடிக்கைகளினால்தான் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பில் தமிழ்மக்களின் நிலங்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்திவருகின்றோம்.
இதனால் இன்று தமிழர்களின் காணிகளை பாதுகாக்கவேண்டிய  நில மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாகியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகளை அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதனைத்தடுத்து நிறுத்தியிருக்கின்றது .
நடந்து முடிந்த தேர்தலில் அண்ணன் கணேசமூர்த்தி அவர்கள் பட்டிருப்புத் தொகுதி வாழ்தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று ஹிஷ்புல்லா அவர்களையும், அமிரலி அவர்களையும் அமைச்சாராக்குவதற்கு உதவியிருக்கின்றார். அது தமிழர்களுக்கு  பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த அமைச்சர்தான் தமிழர்களின் இந்துக் கோயில்களை உடைத்து சந்தை அமைத்து இருக்கின்றார். இது நாம் கணேசமூர்த்தி அண்ணணுக்கு வழங்கிய வாக்குகளால் ஏற்பட்ட விபரிதம் என்பதை எமதுமக்கள் உணரவேண்டும்.
இளைஞர்களுக்குத் தொழில் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று முஸ்லிங்களுக்கு வழங்கிவருகின்ற செயற்பாடே மட்டக்கப்பு மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது அபிவிருத்தி தேவைதான் அதற்காக எமது இருப்பும் நிலங்களும் பறிபோகும்.எந்த வேலைகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்யாது தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்பவர்களுக்கு எமது மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.