திருகோணமலையில்அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள்

0
470

அடக்கு முறைகள்நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாத செயல்கள் திருகோணமலையில் நடைபெறுகிறது.என

திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்,எடுத்துரைத்தார்

திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கன்னியா வடடாரத்துக்கு போட்டியிடும்  திருமதி இராஜலட்சுமி அவர்களின் காரியாலய திறப்பு விழாவும் மக்கள் சந்திப்பும் 26-01-2018 அன்று நடைபெற்றது.

திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்,  திருகோணமலை நகர சபை வேட்பாளர்களான திரு சி நவரத்தினம் மற்றும் நித்தியானந்தன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

இவ் வைபவத்தில் திருகோணமலை  நகரமும்  சூழலும்  பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் வைத்திய கலாநிதி ஞான குணாளன்  அவர் மேலும் பேசுகையில் அடக்கு முறைகள், நில ஆக்கிரமிப்புக்கள் இன்னும் பல விரும்பத்தகாதசெயல்கள் திருகோணமலையில் நடைபெறுகிறது.

நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

இல்லையேல் நாம் எமது உரிமைகளை இழந்து தவிக்க வேண்டி ஏற்படும்.. இந்தத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல.  ஆனால் தமிழ் மக்களின் எண்ணங்கள்எவ்வாறு உள்ளது என்பதை இத்தேர்தல் முடிவு ஒரு கணம் உலகிற்குச் சொல்லும்.

ஆகவே தமிழர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்தால் திருகோணமலைத்  தமிழர்களின் இருப்பு எதிர்காலத்தில் கேள்விக் குறியாகிவிடும் என்பதை ஒரு கணம் மனதில் கொள்வதுஅவசியமாகும் என்றார்.

அத்துடன் பிரதேசத்திலுள்ள  சீரற்ற வீதிகளைப் முன்னுரிமை பிரகாரம்  புனரமைத்து, அவற்றை கிரமமாக பராமரிப்பதுடன் தேவையான  புதிய  வீதிகளையும் அமைத்து போக்குவரத்து வசதிகளை  செயல் படுத்துவோம்.

திண்மக்  கழிவகற்றல், வடிகால்களில் நீர்  மற்றும்  கழிவு பொருட்கள்  தேங்கியிருத்தல்  போன்ற  குறைபாடுகளுக்கு  நிரந்தரமான தீர்வினைக் காணல்..

சுகாதாரப்  பராமரிப்பு நடவடிக்கை டெங்கு  மற்றும்  தொற்று  நோய்களில்  இருந்து  மக்களைப்  பாதுகாத்தல்…

தேவையான  இடங்களுக்கு  வீதி  விளக்குகளைப்  பொருத்தி  அதன் பராமரிப்பை  தொடச்சியாக  கண்காணிப்போம்.

பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களை  தயாரித்து அவற்றுக்கு பொதுமக்களின் அபிப்பிராயம்  பெறப்படுவதுடன் வெளிப்படைத்தன்மையும் பேணப்படும் என உறுதி கூறுகிறோம்.

சுற்றுலா  மேம்பாட்டுக்கான  வாய்ப்புக்கள்  பிரதேசத்தில்  அதிகமாக காணப்படுவதனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விளையாட்டு மைதானங்களை, மயானங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  எடுத்தல். பொது பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள்,  பொழுதுபோக்கு நடைபாதைகள் என்பவற்றைபொருத்தமான இடங்களில் அமைத்தல். போன்ற அபிவிருத்தி திட்ங்களை செயல் படுத்துவோம் என உறுதி கூறினார்.