சிவசக்தி ஆனந்தனுக்கு சிறீதரன் எம்.பி பிறந்த மண்ணில் இருந்து மீண்டும் சவால்!

0
335

நாங்கள் அரசாங்கத்திடம் இரண்டு கோடி ரூபா பணத்தினை வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்துக் காட்டுவாரா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபாக்களை வாங்கியதாக சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய சிறீதரன்,

வவுனியாவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈபிஆர்எல்எப் எந்த வட்டாரத்திலும் வெல்லமாட்டார்கள். இந்த இடத்தில் நீங்கள் அதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

எமது தமிழ் மக்களை ஈபிஆர்எல்எப் கொலை செய்தமையினையும், கொன்று குவித்தமையினையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது சிவசக்தி ஆனந்ததான் எனவும் குற்றம் சாட்டினார்.

நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம் கோரவில்லை. இது அதற்கான தேர்தலும் அல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்காவது இடைக்கால அறிக்கைக்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று கோரியுள்ளனரா? அதனை உறுதிப்படுத்த முடியுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஒரு இலக்கு நோக்கி பயணித்துகொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்