மட்டக்களப்பில் மின் அத்தியட்சகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

0
10561

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்லடி பாலத்திலிருந்து இலங்கை மின்சார சபையின்  மின் அத்தியட்சகர் ஒருவர் கடந்த புதன்கிழமை (24.1.2018)காலை வாவிக்குள் குதித்தாக வெளியான தகவல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தார்கள்.இவ்வாறான நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (26.1.2018)காலை 6.30 மணியளவில் சடலம் மட்டக்களப்பு வாவிக்குள் மிதந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கல்லடியில் உள்ள இலங்கை மின்சாரசபை தலைமையகத்தின் உயர் பதவி வகிக்கும் மின் அத்தியட்சகர் ணேசமூர்த்தி-உமாரமணன்(வயது-34) காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை (24.1.2018) முறையிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் கல்லடி பாலத்தில் இருந்து குறித்தநபர் பாய்ந்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்திருந்தார். இத்தகவல்களை வைத்து பொலிசார் வாவியில் புதன்கிழமை காலை கடற்படையினர்,பொலிசார் சேர்ந்து வாவியில் விசைப்படகில் தேடிவந்திருந்தார்கள்.இவ்வாறு தேடியும் சடலம் மீட்கப்படவில்லை.வாவிக்குள் சடலம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளநிலையில்  தற்போது மீட்கப்பட்டு சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேதப்பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

“வீட்டில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு” குறித்தநபர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு  புதன்கிழமை காலை வெளியேறியுள்ளார். குறித்த மின் அத்தியட்சகர் கல்லடி பாலத்தில் பாய்ந்தாக தெரிவிக்கப்படும் வதந்திகள் தொடர்பில்  பொதுமக்கள் பிரதேசமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.