தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும் – சிவனேசன்

0
657
தமிழர்களின் தனித்துவம், இறமையை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சிக்கு வாக்களித்து பாதுகாப்போம். இல்லாவிட்டால் இருந்ததை இழந்தாய் போற்றிதான். தமிழ்மக்கள் இன்னும் ஏமாற வேண்டாம். கிழக்கு மண்ணையும், தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணப்பிள்ளை சிவனேசன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகம் துறைநீலாவணையில்  போட்டியிடும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளரான நல்லதம்பி பிரகாஸை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (23) மாலை  காரியலயம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கிழக்கை தமிழர்கள் ஆட்சி செய்வதற்கும், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், கிழக்குத் தமிழர்களை பாதுகாப்பதிலிருந்து விடுபட்டு, மாறாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் செய்துகொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்த தமிழனை தமிழ்தேசியகூட்டமைப்பு  கல்லெறிந்து கலைத்துவிட்டு மாற்று இனத்துக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்துத்துள்ளது. இது ஒட்டுமொத்த தமிழினத்துக்கு வெட்கச் செயலாகும்.
இன்று தமிழ் மக்களுக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு போலியான, பொய்யான உணர்ச்சி வார்த்தைகளை சொல்லிக்கொண்டு வாக்குகளை பெறுகின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் தேசியகூட்டமைப்பு படைபட்டாளங்களுடன் தமிழ் மக்களின் பிரதேசங்களுக்கு வருகைதருகின்றது. வந்து தமிழ் மக்களுக்கு  உணர்ச்சி வசப்படும் ஊசிகளை போட்டுச் செல்கின்றது. தேர்தல் முடிந்தால் மக்களின் பிரதேசத்துக்கும், வீடுகளுக்கும் இவர்களால் திரும்பி பார்க்க முடியாது. ஆனால் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும். இது தமிழர்களுக்குரிய தனித்துவமான கட்சியாகும். இதனை துறைநீலாவணை மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும். நீங்கள் யானைக்கு வாக்குப்போட்டால் தமிழன் வரமாட்டான்.
இன்று பட்டிருப்பு தொகுதியைப் பாருங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யானைக்கு போட்ட புள்ளடியால் மாற்று இனத்தவர்தான் பிரதியமைச்சராக வந்திருக்கார். கோழிக்குஞ்சு, தையல்மெசினை கொடுத்து தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதிக்கு தமிழ்த்தலைமையில்லா பிள்ளையாக காணப்படுகின்றது. பட்டிருப்பு தொகுதியில் யானைக்குப்போட்ட புள்ளடியால் மாற்றுயினத்தவனின் மரம் ஒன்று வேர்பிடித்து வளர்கின்றது. இப்படி வேர்பிடிக்கும் மரத்தைப்பற்றி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அரசியல் ஞானம் புரியுமா..?  இதனை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தட்டிக் கேட்கபதற்கு பயம். ஆனால் பிள்ளையானால் மட்டும்தான் இதனை தட்டிக்கேட்க முடியும். பட்டிருப்பு தொகுதியில் யானைக்கட்சியால் சிறிய மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கும் செயற்பாடாகும். அடுத்து மாகாண சபைத்தேர்தல் வருகின்றது. இந்த உள்ளுராட்சி தேர்தலில் யானையை பலப்படுத்தி தமிழ் மக்களால் அமீரலி போன்று இன்னுமொரு அகமட், ஆதம்பாவா, இப்றாலெவ்வையை முதலமைச்சராக  ஆக்குவதற்காக யானைக்கட்சி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாரிய துரோகம் செய்துள்ளது. வடகிழக்கில் உள்ள வறுமைப்பட்ட மக்களுக்கு இதுவரையும் ஒரு மலசலம் கூட கட்டிக்கொடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தனை வன்னி மக்கள் வழிமறித்து கேட்காத கேள்வியெல்லாம் கேட்பதை தொலைக்காட்சியெல்லாம் நாம் பார்க்க முடியும். 62 வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு தமிழ் மக்களுக்கு செய்த கைங்கரியம் என்ன? ஆகக்கேவலம் ஒரு மலசலகூடம்கூட வாக்களித்த மக்களுக்கு அமைத்து கொடுக்கவில்லை. குடிசைகளில் இருக்கும் மக்களை மறந்து வாழுகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டுகோடி ரூபாபணத்தில் மாடிக் கட்டிடத்தை கட்டி சுகபோக வாழ்க்கையை  அனுபவிக்கின்றார். இது பாமர மக்களுக்கு புரியாது. எங்களைப் பார்த்தும், எங்கள் கட்சியைப் பார்த்தும் கொலைகாரர் கட்சியென்று சொல்லுவது மலையைப்பார்த்து நாய் குரைப்பதற்கு சமனாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பில்தான் கொலைகாரர்கள் இருக்கின்றார்கள். புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் எல்லாம் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து கொலைகளை மேற்கொண்டது. தமிழர்களை டயர் போட்டு கொழுத்தியவர்கள்தான் கூட்டமைப்பில் இணைந்துள்ளார்கள்.
கடந்த மாகாண ஆட்சியில் 11 ஆசனங்கள் பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இதனால் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களில் கைகளிலில் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. 7 ஆசனங்களை பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் சாணாக்கியத்தாலும், பணப்பலத்தாலும் சாதித்துள்ளது. தமிழ்பகுதியை தாரைவார்த்துக்கொடுத்து ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, உள்ளிட்ட பல பகுதியை சிங்கப்பூராக மாற்றியுள்ளது. தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு கோட்டாக்களை மாற்றுயினத்துக்கு விற்றுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் சொல்லியிருக்கின்றார் நாவிதன்வெளி பிரதேச சபையை தமிழர்களுடன் இணைந்து ஆட்சியை அமைப்போம் என்று. இது தமிழ்தேசிய கூட்மைப்புக்கு புரியாது. தமிழர்களின் தனித்துவம், இறமையை பாதுகாக்க வேண்டுமாயின் தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சிக்கு வாக்களித்து பாதுகாப்போம். இல்லாவிட்டால் இருந்ததை இழந்தாய் போற்றிதான். தமிழ்மக்கள் இன்னும் ஏமாற வேண்டாம். கிழக்கு மண்ணையும், தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் பிள்ளையானால்தான் முடியும்.
மாற்றம் ஒன்றே தேவையாகும். தமிழ் தேசியம் என்றால் என்ன? தெரியாதவர்கள்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆறுமுகநாவலர்தான் என்னைப்பொறுத்தமட்டில் தேசியத்தை உருவாக்கியவர். அவர்தான் இந்து மதத்தை மாற்ற முட்பட்டவர்களுக்கு தக்க நேரத்தில் தேசியம்பற்றி விளக்கம் கொடுத்தார். தேசியம் தெரியாதவர்கள் தேசியத்தை புரிந்துகொள்ளவும். இன்று வீட்டுக்கு வாக்களித்தவர்கள் வங்கிகளில் கடனைப்பெற்று கடனை அடைப்பதற்கு திண்டாடுகின்றார்கள். இவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது. வீட்டுக்கு வாக்களித்தால் இதேநிலைதான். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் வெள்ளம், மழையிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாக்கும் எனத்தெரிவித்தார்.