260 தேர்தல் முறைப்பாடுகள் : 222 சந்தேகநபர்கள் கைது

0
190

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய 106 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்தோடு 260 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கொடிகளை காட்சிப்படுத்தி வாகனங்களை செலுத்தியமை மற்றும் அவற்றை வைத்திருந்தமை சட்டவிரோத ஊர்வலங்களை நடத்தியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளில் ஈடுப்பட்டமை தொடர்பில் 222 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த 24 மணித்தியால காலப்பகுதில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தாக்கி காயப்படுத்தியமை அச்சுறுத்தியமை பீதியை ஏற்படுத்தியமை உள்ளிட்ட தேர்தல் குற்றச்சாட்டுகள் 260 கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.