நாட்டின் வழமை நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படும்

0
751

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தல் நடத்த முடியாத அளவிற்கு குழப்பநிலை அல்லது வேறேதும் பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றால் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்த முடியாமல் போகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது குறித்து கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சேவைகளை பகிஷ்கரித்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின் குறிப்பிட்ட இடங்களில் தேர்தல் நடத்தமுடியாத குழப்பநிலை ஏற்படும் பட்சத்தில் மூன்று மாத காலத்திற்கு தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்திலும் நான் இந்த விடயத்தை குறிப்பிட்டேன் இன்று காலையிலும் இந்த விடயத்தை குறிப்பிடுகின்றேன் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய  மேலும் தெரிவித்தார்.