சிவானந்த இல்லம் 180 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகைசூடியது.

0
414

தேசியபாடசாலையான திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இ.கி.ச. இந்துக்கல்லூரியின் 2018இற்கான இல்லமெய்வல்லூனர் விளையாட்டுப்போட்டியில் சிவானந்த இல்லம் 180 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகைசூடியது.

நேற்று மாலை கல்லூரியின் மைதானத்தில் நடந்த இந்த விளையாட்டுப்போட்டிகளில் சிவானந்தா,விவேகானந்தா,இராமகிருஸ்ணா,விபுலானந்தா என நான்கு இல்ல மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றினர்.

இதனடிப்படையில் 180புள்ளிகளைப்பெற்று சிவானந்தா முதலிடத்தையும் 179புள்ளிகளைப்பெற்று விவேகானந்தா இரண்டாவது இடத்தையும் 126 புள்ளிகளைப்பெற்று இராமகிருஸ்ண இல்லம் மூன்றாவது இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.பொறியிலாளர் தவாரகன் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துசிறப்பித்தனர் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலமையிலும் விளையாட்டுத்துறைப்பொறுப்பாசிரியர் சி.சசிகுமார் அவர்களின் வழிநடத்தலிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

இல்லமாணவர்கள்,பாணட்;வாத்தியக்குளுவினர்,புனித ஜோன்படையினர்,மற்றும் சாரணர் படையினரினர் உள்ளிட்டவர்களின் அணிநடைவகுப்பும் மாணவர்களின் உடற்பயிற்சிக்ண்காட்சியும் பெற்றாரையும் மற்றாரையும் கவர்ந்தது.

இறுதியில் மாலை 6.30 மணியளவில் நடந்த பரிசளிப்பு நிகழ்வில் திறமைகாட்டிய மாணவர்கள் இல்லங்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.இங்கு பெற்றாருக்கும் கல்லூரிஆசிரியருக்குமிடையில் நடந்த கையிறுழுத்தல் போட்டியில் பெற்றார் அணியினர் வெற்றி வாகைசூடினர என்பதும் குறிப்பிடத்தக்கது.