உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் தைப்பொங்கல் மற்றும் மனித விழுமிய தின நிகழ்வு-2018

0
275
இந்தியா ரிஷிகேஷ் இமயமலை  சுவாமி.நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் பிரதம அதிதி!
காரைதீவு  நிருபர் சகா
 
 
தமிழர்களின் பண்பாடுகள் மற்றும் கலாச்சாரத்தினை மாணவர்கள் மத்தியில்  பேணிவரும் மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் மற்றும் மனித விழுமிய தின நிகழ்வு-2018 நிகழ்வானது இம்முறையும் வெகு விமர்சியாக இடம்பெற்றது .

 
 
இந்நிகழ்வானது உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் கல்விசார்  இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில்  நேற்று  செவ்வாய்க்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இன் சிறப்பான விழாவினை  உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் கல்வி பயிலும்  கணக்கியல் டிப்ளோமா உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் டிப்ளோமா பாடநெறி மாணவர்களும் மற்றும் விரிவுரையாளர்கள் நிவாகத்தினர் வெகு விமர்சியாகவும் மங்களகரமாகவும்  ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
 
 
இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக  ரிஷிகேஷ் இமயமலை இந்தியாவில் இருந்து வந்த சுவாமி.நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்காக சுவாமிஜீ  அவர்களினால்  மனித விழுமியங்கள் தொடர்பான சிறப்பு சொற்பொழிவு வழங்கப்பட்டதுடன்   மேலும் கடந்த வருடம் 2017ம்  ஆண்டில் பல்வேறு துறைகளில் சாதனைகளினை மேற்கொண்டு கல்லூரிக்கு பெருமையினை ஏற்ப்படுத்தித்தந்த மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் மாணவர்களினால் சுவாமிஜீ அவர்கட்கு நினைவு சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.
 
 
மேலும்  மாணவர்கள் அனைவரும் கலாசார உடை அணிந்து ஒவ்வொரு துறைசார் மாணவர்களும் தாங்கள் துறைசார் பொங்கல் பொங்கி மற்றும் அழகிய வண்ணக் கோலங்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றினால் அலங்காரங்கள் செய்து விழாவிற்கு சிறப்பூட்டியதுடம் பூஜை நடைபெற்று பொங்கல் விழா நிறைவுற்றது.  
 
இந்நிகழ்வில்  உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.