மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்ட விரோத மணல் அகழ்வு 5,60,000 ரூபா தண்டம்

0
361

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு 5,60,000 ரூபா தண்டப்பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது

குறித்த 12 சந்தேக நபர்களும் இன்று (24) புதன் கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நிதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜராகியபோது சட்டத்திற்கு முரணாக வாவியின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் 11 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணம் வித்து தீர்பளித்தார்.

பொலிஸாரினால் கைப்பற்றபட்ட மணல் அரச உடமையாக்கப்பட்டதுடன் உழவு இயந்திரங்களை விடுவிக்கமாறு நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக வாவியின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து முந்தன்குமாரவெளி மற்றும் புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்வில் ஈடுபட்பட நிலையில் இந்த உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.