பதுளை அதிபர் : கல்வி அமைச்சர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

0
466

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை முழந்தாழிட கூறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து அறிக்கை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அமைச்சின் செயலாளர் சுனில் ஹட்டியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண கல்வி தலைமை அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் செயற்பாடுகளில் முதலமைச்சர் கல்வி அதிகாரிகளுக்கு ஏதேனும் அழுத்தங்களை மேற்கொண்டிருப்பாராயின் அது தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து உடனடியாக அறிக்கை வழங்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிபர் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவத்தை நிராகரித்தமையுடன் இது ஏதேனும் அரசியல் ரீதியிலான சம்பவமாக காணப்பட்ட போதிலும் தற்பொழுது முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தேவை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தின் உண்மை நிலையை மூடிமறைப்பதில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய கல்வி முக்கியஸ்தர்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் செயற்பட்டமுறை குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு  ஆலோசனை வழங்கியுள்ளார்.