பெண் ஆசிரியை அவமதிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் செயலாளர் கடும் கண்டனம்

0
354
கதிர்காமத்தில் பொலிசாரினால் பொதுமக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஊவா மாகாணத்தில் ஆசிரியரை முழங்கால் இடச் செய்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.
இவ் இரு சம்பங்களை கண்டித்து தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் செயலாளார் வி.கமலதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (23) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்தள்ளார்.
இந்த அரசாங்கம் பொது மக்கள் அரச அதிகாரிகள் விடயத்தில் எவ்வாறு தமது அதிகாhர ஆக்கிரமிப்பு சக்திகளை பிரயோகிக்கின்றனர்  என்பதை இந்த சம்பங்கள் வெளிக்காட்டக்கூடியதாக இருக்கின்றது.
எனவே இந்த அரச அராஜக நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாராம் ஜனாதிபதிக்குரியது என்பதை தெரியப்படுத்துகின்றோம். அதேவேளை அப்பாவி மக்களை பொலிசார் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற விதத்தில் இந்த நடவடிக்கைகள் இருக்ககூடாது.
ஊவா மாகாணத்தில்  பெண் ஆசிரியரை முழங்கால் இடச் செய்த முதலமைச்சரை பதவி நீக்கவேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.
இந்த பெண் ஆசிரியருக்கு ஏற்பட்ட அவமதிப்புபற்றி பெண்கள் அமைப்புக்கள் , பெண் செயற்பாட்டாளர்கள் தமது நிலையை இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது அவர்களின் இரைட்டை வேடத்தை காட்டுகின்றது.
எனவே இவ்வாறு பொதுமக்கள் மீது கட்டிவிழ்த்துப்பட்டுள்ள இச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக அவ் அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.