குறுமன்வெளி கிராமத்திற்கு மேலதிக வேட்பாளர் தேவையில்லை

0
325

வீட்டுக்கு முட்டுத்தேவைப்படும் கிராமங்களுக்கே மேலதிகவேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்பட்டது. எமது குறுமன்வெளி கிராமத்திற்கு மேலதிக பட்டியல் வேட்பாளர் தேவையில்லை. தேவையென ஊடகங்களில் வந்த செய்தியினை நான் முற்றுமுழுதாக மறுக்கின்றேன். என குறுமன்வெளி கிராம தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் பத்மதேவு தெரிவித்தார்

அண்மையில் குறுமன்வெளி கிராமத்திற்கு மேலதிக வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை என வெளிவந்த செய்தி தொடர்பாக வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்

குறுமன்வெளி கிராமத்திற்கான வேட்பாளர் பட்டியலை நானும் சௌந்தரமணியும் தான் குறுமன்வெளி பிள்ளையார் ஆலயமுன்றலில் வைத்து  தயாரித்தோம். ஆனால் அப்போது எவரும் மேலதிக வேட்பாளர் சம்பந்தமாக பேசவில்லை எமது கிராமத்தினை பொறுத்தளவில் மேலதிக வேட்பாளர் தேவையில்லை காரணம் நாங்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையே தொண்டு தொட்டு ஆதரித்து வருகின்றோம்.

 எனவே எமது கிராமத்தினை பொறுத்தளவில்  வீட்டுக்கு முட்டு தேவையில்லை முட்டு தேவைப்படும் கிராமங்களுக்கே நாங்கள் மேலதிக வேட்பாளர் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தோம்.